தடபுடலாக நடந்த திருமணத்தை திடீரென தடுத்து நிறுத்திய மணமகள்!

சினிமா

தனது அழகுத் தரத்துடன் மணமகன் பொருந்தாததால், திடீரென மணமகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியில், கடந்த 24ம் திகதியன்று வழக்கமான இந்திய முறைப்படி திருமணம் ஒன்று நடைபெற்று கொண்டிருந்துள்ளது.

மணமகன் செஹ்ராவும் மற்றும் மணமகள் முக்கடும், அணிந்தபடியே மேடையில் அமர்ந்திருக்க உறவினர்களும் வந்தவண்ணம் இருந்துள்ளனர்.

அப்போது மணமகனின் செஹ்ரா உயர்த்தப்படுவதை கவனித்த மணமகள் திடீரென திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இதனை கேட்டதும் அங்கிருந்த அனைவருமே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மணமகன் கருப்பாகவும், அதிக வயது கொண்டவரை போலவும் இருப்பதாக மணமகள் கூறியுள்ளார்.

மணமகளை இருவீட்டாரும் சமாதானப்படுத்த முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மாலையில் இருவீட்டாரும் ஒன்றாக அமர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டர். திருமணத்திற்காக மணமகன் வீட்டார் செய்த செலவுகள் அனைத்தையும் மணமகள் வீட்டார் கொடுக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, இருவீட்டாரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *