டைரக்டர் விஜய் 2-வது திருமணம்: டாக்டரை மணக்கிறார் புகைப்படம் வெளியாகியது

சினிமா

 

அஜித்குமார் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன். நடிகர் உதயாவின் தம்பி. ‘கிரீடம்’ படத்தை அடுத்து ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ உள்பட பல படங்களை விஜய் டைரக்டு செய்து இருக்கிறார்.
இவர் டைரக்டு செய்த ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ ஆகிய படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். மூன்று வருடங்களுக்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017-ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
விவாகரத்துக்குப்பின், அமலாபால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதேபோல் விஜய்யும் டைரக்டு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும்படி, பெற்றோர்கள் வற்புறுத்தி வந்தார்கள். அதற்கு சம்மதிக்காத டைரக்டர் விஜய், 2-வது திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார்.
இப்போது பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2-வது திருமணத்துக்கு அவர் சம்மதித்து இருக்கிறார். அவர் மணக்க இருக்கும் பெண்ணின் பெயர், ஐஸ்வர்யா. சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகள். இவர், ‘எம்.பி.பி.எஸ்.’ பட்டம் பெற்ற டாக்டர். பொதுநல மருத்துவராக இருந்து வருகிறார்.
டைரக்டர் விஜய், டாக்டர் ஐஸ்வர்யா திருமணம் அடுத்த மாதம் 11-ந் தேதி, சென்னையில் நடக்கிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரண்டு பேரின் பெற்றோர்களும் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *