ஜெர்மனி வைத்தியர்களால் பிரிந்த அப்பாவி பெண்ணின் உயிர்..! சோகத்தில் குடும்பத்தினர்..!!

குற்றம்

ஜெர்மனியில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பண்டதரிப்பை சேர்ந்த பிரியா என்ற 25 வயதான பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெரிய வருவதாவது ஜெர்மனில் வசித்து வரும் ரேஹன் என்பவரை திருமணம் செய்து சில வருடங்களுக்கு முன்பு பிரியா ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கர்ப்பமான பிரியாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த பின் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் பரிசோதனை செய்த போது அறுவை சிகிச்சையில் தவறு ஏற்பட்டது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து மீண்டும் அறுவை சிகிச்சை ஒன்று மேட்கொள்ளப் பட்டது. இதனால் பிரியா கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த புதன் கிழமை இவரது உயிர் பிரிந்துள்ளது. ஏராளமான கனவுகளுடன் வாழ்க்கையை தொடங்கிய ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை வைத்தியர்களின் கவனக் குறைவால் பிரிந்துள்ளது…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *