ஜவ்வரிசி உருண்டை

ஆரோக்கிய சமையல்

 

 

 

ஜவ்வரிசி உருண்டை

தேவையானவை:
ஜவ்வரிசி – ஒரு கப்
சர்க்கரை – கால் கப்
நெய் – கால் கப்
ஏலக்காய் – ஒன்று
முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன் (உடைத்தது)

செய்முறை:
ஜவ்வரிசியை வெறும் வாணலியில் நன்றாக பொரியும் வரை வறுக்கவும். வறுக்கும்போது ஜவ்வரிசி அதன் சைஸைவிட ஒரு பங்கு பெரியதாக வரும். பிறகு ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி மாவு, அரைத்த சர்க்கரை-ஏலக்காய் கலவை, முந்திரி சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ளவும். பிறகு, மீதமுள்ள நெய்யை உருக்கி மாவில் ஊற்றி சூடாக இருக்கும்போதே உருண்டைகள் பிடிக்கவும். நெய் சூட்டோடு இருந்தால் மட்டுமே லட்டு பிடிக்க வரும். இல்லையென்றால் உதிர்ந்துவிடும்.

குறிப்பு:
ஜவ்வரிசி உருண்டைக்கு மாவு ஜவ்வரிசிதான் ஏற்றது. நெய் குறைவாக சேர்த்தால் உருண்டை உடைந்துவிடும். வேண்டுமென்றால், சிறிது பால் தெளித்து உருட்டலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *