ஜப்பான் கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இலங்கை இறக்குமதி.!

செய்தி

உலக நாடுகளுக்கே தண்ணி காட்டும் கொரோனா வைரசுக்கு ஜப்பான் கண்டுபிடித்துள்ள மருந்தை இலங்கை இறக்குமதி செய்ய ஜனாதிபதி செயலகம் ஊடாக விண்ணப்பித்துள்ளதாக வரையறுக்கப்பட்ட அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்குள் மருந்து விநியோகத்தை முறைப்படுத்த ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச மருந்தங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்த போது அரச மருந்தகங்கள் எதுவும் திறந்திருக்கவில்லை. அதன் காரணமாக மருந்துகளை கொள்வனவு செய்ய வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *