ஜப்பானிய பெண்கள் தொப்பையே இல்லாமல் ஒல்லியாக இருக்க தமிழர்களின் இந்த உணவுதான் காரணமா? இனியும் ஒதுக்காதீர்கள்

சினிமா

ஜப்பானை பார்த்து பல நாடுகளும் இன்று வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கு அதன் வளர்ச்சி எல்லா துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறது.

சில நாடுகள் ஜப்பானின் இந்த அசுர வளர்ச்சிக்கு என்ன காரணம் என கண்டுபிடிக்கவே பலவித உளவு துறைகளை வைத்துள்ளது.

விண்ணை முட்டும் தொழிற்நுட்பங்கள், ஆச்சரியமூட்டும் உணவு வகைகள், சிறந்த பழக்க வழக்கங்கள் போன்றவை தான் இந்த நிலைக்கு முழு காரணமும்.

பொதுவாகவே ஜப்பானியர்கள் பார்ப்பதற்கு அதிக இளமையுடனும், ஒல்லியாகவும் இருப்பார்கள். 40 வயதுடையவரை பார்த்தால் 25 வயது உள்ளவரை போன்றும், 30 வயதுடையவரை பார்த்தால் 18 வயது உள்ளவரை போன்றும் தோற்றம் இருக்கும். இதற்கெல்லாம் முக்கிய காரணமே அவர்கள் சாப்பிட கூடிய உணவுகளும், உணவு முறையும் தான் என்கின்றனர்.

தமிழர்களின் உணவு

ஜப்பானியர்களும் நம்மை போன்றே அரிசியை முதன்மை உணவாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். இவர்களின் சாப்பிட்டில் சிறு பங்கு வேக வைத்த அரிசி உணவுகள் இருக்குமாம். மேலும் இதில் உப்போ அல்லது வெண்ணெய்யையோ சேர்க்க மாட்டார்கள்.

காலை உணவு எப்படி..?

காலை உணவில் வகை வகையான உணவுகளை சேர்த்து இவர்கள் உண்பார்களாம். குறிப்பாக மீன், அரிசி, சூப், கடற்களைகள், ஆம்லெட்ஸ், போன்ற உணவுகள் இதில் இடம்பெற்றிருக்கும். அத்துடன் காலை உணவில் அதிக அளவில் சாப்பிடுவார்கள்.

மெல்ல உண்ணும் முறை…

இவர்கள் சாப்பிடுவதற்கென்று சில பாரம்பரிய விஷயங்களை கடைபிடித்து வருகின்றனர். சாப்பிடும் போது ஒவ்வொரு துண்டையும் மெல்ல சுவைத்து சாப்பிடுவார்களாம். மேலும், செயற்கை இனிப்பூட்டிகளையோ சுவையூட்டிகளையோ இவர்கள் பெரும்பாலும் சேர்க்க மாட்டார்களாம்.

குறைந்த கலோரி உணவுகள்

கண்ட நேரத்தில் கண்ட உணவுகளையெல்லாம் சாப்பிட கூடிய பழக்கம் இவர்களுக்கு கிடையாதாம். எப்போதும் குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளையே சாப்பிட விருப்பம் தெரிவிப்பர்.

மேற்சொன்ன வழி முறைகளை நீங்களும் கடைபிடித்து வந்தால் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *