ஜனார்த்தன ஷர்மா மகள்கள் வீடியோ மூலம் விளக்கம்!இந்தியாவுக்கு வர விருப்பமில்லை’

சினிமா

ஜனார்த்தன ஷர்மாவின் இருபெண்களும் வரும் ஜனவரி 16ம் தேதிக்குள் எந்த நாட்டில் உள்ளனரோ அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஆஜராக வேண்டும் என குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு, ஆள்கடத்தல் என பல வழக்குகள் குஜராத், கர்நாடக நீதிமன்றங்களில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதனிடையே நித்தியானந்தாவின் தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக இருந்த ஜனார்த்தனா ஷர்மா, நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் குஜராத் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டிலிருந்து தத்துவப்ரியா, அவரது தங்கை நித்ய நந்திதா இருவரும் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். அதில், எங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பமில்லை. நாங்கள் தற்போது சுதந்திரமாக இருக்கிறோம். எங்கள் தந்தையால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றனர்.

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் 16 ஆம் தேதிக்குள் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

 

முன்னதாக கடந்த 5ம் தேதி நடந்த விசாரணையின் போது அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலிருந்து வாக்குமூலம் இவர்கள் தற்போது பார்படாஸ் நாட்டிலிருந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *