சௌந்தர்யா ரஜினிகாந்த் முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன்? அம்பலமான அதிர வைக்கும் உண்மை

சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா முதல் கணவரான அஸ்வினை பிரிந்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

உலகெங்கும் ரசிகர் பட்டாளத்தினை வைத்திருக்கும் நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

இதில் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து, இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இரண்டாவது மகள் சௌந்தர்யா பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரான அஸ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்து, வேத் என்ற மகனும் உள்ளார்.

இவர் தனது முதல் கணவர் அஸ்வினை விவாகரத்து செய்துவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தொழிலதிபரும் அரசியல் பிரமுகரின் மகனுமான விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

முதல் கணவரை பிரிந்ததற்கு கருத்து வேறுபாடு தான் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது உண்மையான காரணம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சவுந்தர்யா தனது கணவரை பிரிய அவரது கோபம்தான் என தகவல் வெளியாகியுள்ளது. அதிகமாக கோப்படும் குணம் கொண்ட சவுந்தர்யா, திருமணத்திற்கு பிறகும் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றும் இது அஷ்வின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதுகுறித்து ரஜினிகாந்த் சௌந்தர்யாவிடம் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை என்றும், அஷ்வின் சேர்ந்து வாழ்வதற்கு ஆசைப்பட்டார் என்றும் ஆனால் சௌந்தர்யா தான் வாழவிருப்பமில்லை என்று கூறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *