சொந்த ஊர் திரும்பிய முதியவருக்கு நடந்த கொடுமை..! என்ன பைத்தியக்காரான்னு சொல்றாங்க சார்’!..

குற்றம்

குடும்பத்துக்காக வெளிநாட்டில் 40 வருடமாக உழைத்த முதியவரை சொத்துக்காக வீட்டை விட்டு வெளியே துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் முதியவரான நாகராஜன். இவரது மனைவி குமரி.இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். நாகராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் சுமார் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். இதன்மூலம் மாடி வீடு, வணிக வளாகம் என 2 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். மகன்கள் இருவரும் வெளிநாட்டு வேலையில் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் குடும்பத்துக்காக 40 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்த நாகராஜன் முதுமை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். ஊருக்கு வந்த அவரிடம் சொத்துக்களை தங்களது பெயரில் மாற்றி தரவேண்டும் என அவரது மனைவியும், குடும்பத்தினரும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் நாகராஜன் தனது சொத்துக்களை எழுதி தர மறுத்துள்ளார். அதனால் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை வருடமாக சரியாக உணவு, தண்ணீர் இல்லாமல் சாலையில் திரிவதாக நாகராஜன் கண்கலங்க தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *