சொகுசு ஹொட்டலில் அன்றிரவு முழுவதும்: உதயநிதி ஸ்டாலின் குறித்து நடிகை பகீர் பதிவு

சினிமா

பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகர் உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. இவர் தமிழ் நடிகர்கள் மீதும் தொடர்ந்து பரபரப்பான பாலியல் குற்றசாட்டுகளை வைத்து வருகிறார்.

இதுவரை இவருடைய பட்டியலில் இயக்குனர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், விஷால் என பல நடிகர்கள் பெயர்கள் அடிபட்டுள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மீது தற்போது சர்ச்சையான பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், உதயநிதி சார் கிறீன் பார்க் ஹொட்டல் நியாபகம் இருக்கா? கதிர்வேலன் காதல் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்த போது விஷால் ரெட்டி மூலமாக உங்களை சந்தித்தேன்.

அதன் பிறகு அன்றிரவு முழுவதும் என்னுடன் உறவில் இருந்தீர்கள், எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறினீர்கள். இதுவரை அப்படி எதுவும் கொடுக்கவில்லை. நீங்கள் செய்ததை என்னால் மறக்க முடியாது. யு கிரேட் சார் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகராக மட்டுமின்றி திமுக இளைஞரணி செயலாளராகவும் உள்ள உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்கு இந்த குற்றச்சாட்டு பாதிப்பை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *