செல்வ வளத்தை பெருக்க நாம் செய்யக் கூடாதது என்ன

ஜோதிடம்

 

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டை துடைக்கக் கூடாது. மற்ற நாட்களில் துடைக்கும்போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைக்க வேண்டும்.
வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்றவேண்டும். குத்துவிளக்கு கிழக்கு நோக்கியும், துணை விளக்கு வடக்கு பார்த்தும் இருக்கவேண்டும்.
சுடுகாட்டுக்கு அருகில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்க்கக் கூடாது.
வீட்டு வாசற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக்கூடாது.
மல்லிகைப் பூ, ஏலக்காய், பச்சை கற்பூரம், சந்தனம், வில்வ இலை ஆகியவற்றை வெள்ளிக் கிழமைகளில் காலை சூரிய உதயத்தின் போது  பணப் பெட்டியில் வைக்கவேண்டும்.
உறங்கும்போது வடக்கு நோக்கி தலை வைப்பதை தவிர்த்து, மேற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.
பூஜை அறையில் 2 கடவுளின் சிலைகளை எதிரெதிரே வைத்தல், உடைந்த சிலை, கிழிந்த கடவுளின் படங்கள் போன்றவற்றை வைக்கக்  கூடாது.
தெற்கு திசையில் கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே, வீட்டின் சுவற்றில் மாட்டக் கூடாது. கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு  திசையில் வைக்கவேண்டும்.
செல்வத்தின் அதிபதியான குபேரன் ஊறுகாய் பிரியர் என்பதால், வீட்டில் பல வகையான ஊறுகாய்கள் வைத்திருக்கவேண்டும். இதனால்  செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
வீட்டில் 3 நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. ஒரே ஆடையை அடிக்கடி அணிவதும், உடுத்திய துணியை வீட்டின்  கதவுகளில் தொங்க விடவும் கூடாது.
லட்சுமி தெவியின் அடையாளமான பால், தேன், தாமரை, தானியக்கதிர் ஆகியவை வீட்டில் எப்போதும் இருக்கவேண்டும். குறிப்பாக நானயங்களை வெள்ளிக் கிண்ணத்தில் வைக்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *