சென்னையில் வேலை பார்த்த கணவன்! ஊரில் வசித்த மனைவி வீட்டுக்கு வந்த நபர் கண்ட காட்சி

சினிமா

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு நர்மதா தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

இருவரும் அருகில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள். பிரகாஷ் சென்னை ஆவடியில் உள்ள ராணுவ பாதுகாப்பு சேவை மையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலையில் நர்மதா தேவி தனது குழந்தைகளை பள்ளியில் கொண்டு விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறும், தனது குழந்தைகள் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கும் உடற்கல்வி ஆசிரியர் தினேஷ்குமார் என்பவருக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் ஒன்றை அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் தூக்கில் தொங்குவது போன்ற புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனே நர்மதா தேவி வீட்டிற்கு சென்றார். அப்போது அவருடைய வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீ்ட்டிற்குள் நர்மதா தேவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *