சுருக்கம் நீங்க… இளமை நீடிக்க!,tamil beauty tips face

அழகுக் குறிப்புகள்

 

சுருக்கம் நீங்க… இளமை நீடிக்க!

சரும வறட்சியின் அடுத்தகட்ட பாதிப்பு, சரும சுருக்கம். இந்தப் பிரச்னையைத் தவிர்ப் பதற்கான முன்னெச்சரிக்கைக் குறிப்புகளை வழங்குகிறார், சென்னை, ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ பியூட்டி சலூனின் டிரெயினர் பத்மா…

முகச்சுருக்கங்கள் நீங்க..!

மிக்ஸியில் அடித்த கனிந்த செவ்வாழைப் பழம் இரண்டு ஸ்பூனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இது சரும வறட்சியைத் தடுத்து, ஈரப்பதத்தைக் கொடுக்கும்.

அவகோடா பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அடித்து, முகத்தை நன்கு கழுவிய பின் அந்த அவகோடா பேஸ்ட்டை முகம் முழுக்க பரவலாகப் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதைச் செய்துவந்தால், ஏற்கெனவே இருக்கும் சரும சுருக்கங்கள் குறைவதுடன், மேலும் சுருக்கம் வராது.

முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் முகத்தில் தடவி, உலர்ந்து இறுகியதும் கழுவவும். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர, சரும சுருக்கம் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.

கழுத்து பளபளக்க..!

கழுத்தை தினமும் ஸ்க்ரப் செய்தாலே, பளிச் என்றிருக்கும். சப்போட்டா, தர்பூசணி, நாவல் என ஏதாவது ஒரு பழத்தின் கொட்டையைக் காயவைத்து மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும். இதுதான் சருமத்துக்கான இயற்கை ஸ்க்ரப். இந்த ஸ்க்ரப் பொடியுடன் ஏதாவது பழத்தின் சதைப் பகுதி சிறிதளவு சேர்த்துக் குழைத்து, கழுத்தில் தடவி, விரல்களால் சிறுசிறு வட்டங்கள் போல ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். உலரவிட்டுக் கழுவவும். அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி பளிச் என்று ஆகும்.

இதே ஸ்க்ரப் பொடியை அரை ஸ்பூன் எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் குழைத்து, கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதுவும் சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, கழுத்தை மிருதுவாக்கும்.

இன்னும் எளிய வழி, கழுத்தை தண்ணீரால் நனைத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து கழுத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இறந்த செல்களை நீக்கும்; கழுத்தின் கருமையும் நாள்பட மறையும்.

விரல்கள் மற்றும் நகங்கள்..!

வாரம் ஒருமுறை விரல்களை ஸ்க்ரப் பொடிகொண்டு நன்கு தேய்த்து இறந்த செல்களை நீக்கிவிடவும். ஒரு பாத்திரத்தில் உள்ளங்கை மூழ்கும் அளவுக்கு வெதுவெதுப் பான நீரை ஊற்றி அதில் ஒரு மூடி எலுமிச்சைச் சாறு பிழிந்து, அதில் கைகளை 10 நிமிடங்கள் ஊறவிடவும். பின் சாஃப்ட்டான பிரஷ் கொண்டு கை விரல்களை மிருதுவாகத் தேய்க்க, இறந்த செல்கள் நீங்கும். கைகளைக் கழுவி துடைத்துவிட்டு, சிறிது ஆலிவ் ஆயிலை விரல்களிலும் நகங்களிலும் தடவி மசாஜ் செய்யவும். இதனால் கை விரல்களின் சுருக்கம் நீங்கி, நகங்களும் வலிமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *