சுனைனாவின் தைரியத்தைப் பாராட்டிய ரசிகர்கள்

சினிமா

ஒருகாலத்தில் இளைஞர்களைத் தன் வசப்படுத்தி வைத்திருந்த சுனைனா தமிழ் சினிமாவில் மீண்டும் ஒருமுறை வெற்றி வலம் வரமுடியும் என நம்புவதாகக் கூறியுள்ளார்.

‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இவர், அடுத்தடுத்து சில படங்களில் நடித்து அசத்தினார். இடையில் தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் பிற மொழிகளில் கவனம் செலுத்தியவர், தற்போது ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்துக்குத் திரும்பியுள்ளார்.

இதையடுத்து ‘டிரிப்’ என்ற படத்தில் பார்த்தாலே மிரளவைக்கும் ஒரு நாயுடன் நடித்துவருகிறார். அதனுடன் காட்டுப் பகுதியில் சுற்றித் திரிவது போன்று சில காட்சிகள் உள்ளனவாம்.

படப்பிடிப்பின்போது எடுக்கப் பட்ட சில புகைப்படங்களைத் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சுனைனா. அவற்றைக் கண்ட ரசிகர்கள் இவரது தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *