சுடான சுவையான நெய் சாதம் ரெசிபிய இப்போ உங்க வீட்லயும் செய்யலாம்!

ஆரோக்கிய சமையல்

அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
சுவையான நெய் சோறு ரெசிபி எளிதாக எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

2/8அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
தேவையானவை: பாசுமதி அரிசி – அரை கிலோ, நெய் – 150 மில்லி, சுத்தம் செய்த சின்ன வெங்காயம் – ஒரு கப், பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2, எண்ணெய் – 50 மில்லி, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், தண்ணீர் – 650 மில்லி, பச்சை மிளகாய் (கீறியது) – 3, உப்பு – தேவைக்கேற்ப.

3/8அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்றாகக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

4/8அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் – நெய் ஊற்றி… பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலையை தாளிக்கவும்.

5/8அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
பிறகு, அதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி – பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

6/8அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
தண்ணீர் கொதித்தவுடன், அரிசியைப் போட்டு கிளறி, தண்ணீர் வற்றியவுடன் பாத்திரத்தை இறக்கவும்.

7/8அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
பிறகு ‘தம்’ போடவும் (அடுப்பின் மேலே தோசைக்கல்லை வைத்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடிய பாத்திரத்தை தோசைக்கல்லின்மீது வைத்து, 10 (அ) 15 நிமிடங்கள் வேகவிடவும்).

8/8அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
அட்டகாசமான நெய் சோறு ரெசிபி!
பிறகு, சாதத்தை எடுத்து பரிமாறவும். சுவையான நெய் சாதம் தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *