சீன கலாச்சாரத்தின் படி இந்த அதிர்ஷ்ட எண்கள் தமிழர்களுக்கு எப்படி? ராஜயோகம் யாருக்கு தெரியுமா?

ஜோதிடம்

சீனர்களின் ஜோதிப்படி எந்தெந்த எண்கள் அதிர்ஷ்டமான எண்கள் என்று இங்கு பார்ப்போம்.

அதிர்ஷ்ட எண் 2

உலகம் முழுவதும் பல கலாச்சாரங்களில் எண் 2 அதிர்ஷ்டமான எண்ணாக கருதப்படுகிறது.

அதற்கு காரணம் அதன் ஜோடி கூட்டுத்தொகையாகும், அதாவது 1+1=2. இதன்மூலம் அனைத்து நல்ல செய்திகளும் ஜோடியாக வரும்.

எப்பொழுதும் ஒரு பொருளுடன் இன்னொரு பொருள் சேர்ந்து வருவது அதிக இன்பத்தைத்தான் கொடுக்கும்.

அதிர்ஷ்ட எண் 6

சீன கலாச்சாரத்தில் 6 மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாகும் அதற்கு காரணம் அது உச்சரிக்கப்படும் விதமாகும்.

ஆம், இது ஒலி பொருத்தத்திற்கான சிறந்த உதாரணமாகும். மாண்டரின் படி இது லியு என்று அழைக்கப்படும். இதற்கு உராய்வின்றி மென்மையான என்பது அர்த்தமாகும்.

எனவே 6 அதிர்ஷ்டமான எண்ணாக கருதப்படுகிறது. இது எந்த தடைகளும் இன்றி சீராக காரியத்தை முடிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

6 ஆனது அதன் முக்கியத்துவம் காரணமாக அனைவராலும் விரும்பப்படுகிறது, பல ஆறுகள் இருப்பது மேலும் அதிர்ஷ்டம் என்று கருதப்படுகிறது.

உதாரணத்திற்கு சீனாவில் ஒரு வாகனத்தின் எண்ணில் நிறைய 6 இருந்தால் அதனை வாங்குபவர் அதிக பணம் செலுத்த வேண்டும். அதற்கு காரணம் அதில் அதிர்ஷ்ட எண் 6 அதிகமிருப்பதுதான்.

அதிர்ஷ்ட எண் 8

8 ஆனது இந்தியா மற்றும் சீனா இரண்டு கலாச்சாரங்ளிலும் அதிர்ஷ்டமான எண்ணாக கருதப்படுகிறது.

கிரேக்கர்களை பொறுத்தவரை எண் 8 முடிவிலியை குறிக்கிறது, மேலும் இது ஒரு தனித்துவமான சமச்சீர்நிலையைக் கொண்டுள்ளது.

இந்தியர்களை பொறுத்தவரை 8 ஆனது சனிபகவானை பிரதிபலிக்கும் எண்ணாகும்.

சீன கலாச்சாரத்தில் ஒலி பொருத்தத்திற்கான மற்றொரு உதாரணம் 8 ஆகும். கன்டோனியா மொழியில் இதனை உச்சரிக்கும் போது அது ” செல்வம்” மற்றும் ” செழிப்பை” உணர்த்துவதாக உள்ளது.

இது அதிர்ஷ்டத்திற்கு மிகவும் நெருக்கமான எண்ணாகும். எனவே 8 அதிகமாக இருப்பது உச்சத்திற்கு அழைத்து செல்லும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அதிர்ஷ்ட எண் 7

சீனர்கள் எண் 7-ஐ அதிர்ஷ்ட எண்ணாக கூறக் காரணம் இதன் ஒலி வாழ்க்கை மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடையது என்பதால்தான்.

அவர்களை பொறுத்தவரை 7 நல்ல சகுனமாக கருதப்படுகிறது. 7 என்பது ஒற்றுமைக்கான குறியீடாகும்.

நீங்கள் 7 ஆம் தேதியில் நிச்சயதார்த்தமோ அல்லது திருமணமோ செய்ய நேர்ந்தால் அது உங்களை அதிர்ஷ்டமாகும்.

பாரம்பரியமாக, பல கலாச்சாரங்களில் 6 ஆம் எண் மனிதகுலத்தை குறிக்கிறது, இதன் காரணமாக, எண் 7 என்பது மனிதகுலத்தின் மையமாக மேலே உள்ள கடவுளுடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது என நம்பப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *