சீனாவில் மீண்டும் ஆரம்பித்துள்ள 2nd வேவ்..! 4 பேர் பலி 33 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்..!

செய்தி

சீனாவின் வுஹான் நகரில் அடையாளம் காணப் பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் 33 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர், பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதில் இத்தாலியில் 10 ஆயிரத்திற்கு மேட்பட்ட மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டில் 6 ஆயிரத்திற்கு மேட்பட்ட மரணங்கள் பதிவாகி உள்ளது.

கொரோனா பரவ காரணமாக இருந்த சீனாவில் 3304 ஆயிரம் மரணமடைந்ததுடன் 81470 பேர் பாதிக்கப் பட்டனர். இருப்பினும் கடந்த ஒரு வாரமாக அங்கு நிலமை வழமைக்கு திரும்பியது. கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட அடையாளம் காணப் படவில்லை, மரணமடையவும் இல்லை. இது உலக நாடுகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைத்து ஒரே நாளில் நான்கு கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்கள் இறந்ததுடன் 33 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சீன அரசு அறிவித்துள்ளது. முடிந்து விட்டது என கொண்டாடிய சீன மக்களின் சந்தோசம் சில நாட்கள் கூட நிலைக்கவில்லை. இரண்டாம் அலை மறுபடி உருவாகி உள்ளது.

இது பற்றி ஏற்கனவே வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதில் இரண்டாம் அலை 2nd வேவ் மீண்டும் சீனாவில் ஆரம்பித்தால் மீள்வது கடினமாகும்.இது குறித்து அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டது. ஆனால் வைத்தியர்கள் அச்சப்பட்டது தற்போது நடந்துள்ளது. மீண்டும் மரணம் நிகழ ஆரம்பித்துள்ளது.. எது எப்படி போனாலும் இது சீனாவின் வேறு ஏதாவது திட்டமாக இருக்கலாம் எனவும் சிலர் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *