சீனாவில் இருந்த 1.5 கோடி பேர் எங்கே…!? கேள்வி எழுப்பும் ஜெனிபர் ஜெங்..! மாயமானது எப்படி ? மரணத்தை மறைக்கிறதா சீனா…!!

செய்தி

சீனா ஏற்கனவே இறந்தவர்களின் முழுமையான எண்ணிக்கையை மறைக்கிறது என உலக நாடுகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில் சீனாவில் பிறந்து நியூயார்க்கில் வசிக்கும் ஜெனிபர் ஜெங் பதற வைக்கும் செய்தி ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் முதல் பகுதி வரை பிரபல “சைனா மொபைல்” நிறுவனம் சுமார் 81 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாம்.

சரி சைனா மொபைல் சேவை திருப்தி இல்லாமல் வேறு நிறுவனத்திற்கு ..மாறி இருக்கலாம் என்றால் அதுவும் இல்லை. சீனாவின் பிரபல மொபைல் நிறுவனமான “சைனா யுனிகார்ன்” ஜனவரியின் பின் சுமார் பத்து லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது, இதை தவிர மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் “சைனா டெலிகம்யூனிகேஷன்” நிறுவனம் 5. 6 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களின் கணக்குப் படி சுமார் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் தற்போது இல்லை . இவர்கள் எங்கே சென்றுள்ளனர்.! ? என்ன ஆனார்கள். இவ்வளவு மக்களும் இந்த மூன்று மாதத்திற்குள் தொலைபேசி பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார்களா அல்லது மொபைல் இல்லாத உலகத்திற்கு சென்று விட்டார்களா.?

நிஜத்தில் சீனாவில் என்ன நடக்குறது என ஜெனிபர் ஜெங் தனது சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார். இதே கேள்வி உலக நாடுகளிடமும் இருக்கிறது. இருப்பினும் சீனா அதற்கு பதில் மொடுத்து விட்டது. அதாவது தனது நாட்டில் 3304 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அதற்கு மேல் எதுவும் இல்லை. இது தான் சீனாவின் பதில்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *