சில பரிகாரங்கள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண….!!

ஜோதிடம்

வாகன விபத்து அடிக்கடி நடக்கும் தன்மை உடையோர், நில மற்றும் மனை கட்டி தருதல் போன்ற வியாபாரம் செய்வோர் கடுகு எண்ணையில் மாதம் ஒரு முறை உடல் முழுதும் தடவி குளிக்க நன்மை பெருகும். மேலும் செவ்வாய் தோஷம் உள்ளோர்களும், கணவன்-மனைவி சண்டை  அடிக்கடி நடக்கும் குடும்பங்களும் இதை செய்யலாம். 
வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது
இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்
காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக  தூங்கும்.
சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.
ஒருவருக்கு தொடர்ந்து உடல் பிரச்சனைகள் இருந்து கொண்டு இருந்தால் கடுகு எண்ணையை ஒரு கிண்ணத்தில் விட்டு சம்பந்தப்பட்டவரை  கிழக்கு முகமாக நிற்க வைத்து ஏழு முறை அவர் தலையை சுற்றி “ஓம் பைரவாய நமஹ” மந்திரம் 108 கூறி வாசலில் எண்ணெய்யை கொட்டிட சீக்கிரம் குணம் உண்டாகும். வெகு நாள் மருத்துவத்தில் உள்ளோர் 8 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *