சில்லி சிக்கனுடன் இதை சேர்த்து கட்டாயம் ஏன் சாப்பிட வேண்டும்..?

ஆரோக்கிய சமையல்

 

பெரும் ஓட்டலில் சில்லி சிக்கன் ஆர்டர் செய்தால், பக்கத்து டேபிளில் இருப்பவர் வாயிலும் எச்சில் ஊறும் வகையில் சிக்கன் பரிமாறுவார்கள் . கூடவே 2 துண்டு எலுமிச்சை பழங்களும் தருவார்கள் .

சில்லி சிக்கனுக்கும், எலுமிச்சை பழத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரியாமல் அதை அப்படியே சிலர் விட்டுவிடுவார்கள். கொஞ்சம் அதைப்பற்றி தெரிந்தவர்கள் அதை சிக்கன் மீது பிழிந்து விட்டு சாப்பிடுவார்கள்.


சிக்கனுடன், எலுமிச்சை பழத்துண்டை கொடுக்க முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. அதனால்தான், சிக்கன் சாப்பிடும் போது வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.

அதாவது, ”சிக்கன் மட்டுமல்ல… இரும்புச் சத்து அதிகம் உள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதனுடன் வைட்டமின்- சி சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஓட்டலில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்துவிடாமல், சிக்கனை சாப்பிட்டால் நீங்கள் கொடுத்த பணத்துக்குரிய பலன் கிடைக்காமல் போகும்.

ஆகையால், அடுத்த முறை ஓட்டலுக்கு போனால், எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு, சிக்கனை ருசித்துவிட்டு வாருங்கள்.-Source: tamil.eenaduindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *