சின்ன சின்ன மருத்துவ நடைமுறைகளையும் கடைபிடித்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்!…, udambu kuraiya tips

உடல் ஆரோக்கியம்

உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியமானது. கூடவே உடல் உழைப்பு மிகவும் அவசியம். அத்துடன் சின்ன சின்ன மருத்துவ நடைமுறைகளையும் கடைபிடித்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுகளிலிருந்தும் நம் உடலில் கலோரிகள் சேர்கின்றன. சரியாக எரிக்கப்படாத கலோரிகள் நம் உடலில் கொழுப்பாக மாறிடும். இப்படி அளவுக்கு அதிகமாக சேரும் கொழுப்பினால் தான் நமக்கு பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்தால் மஞ்சள் பால் தயார். இதனை தினமும் ஒரு நேரம் மட்டுமே குடிக்க வேண்டும்.

மஞ்சள் சேர்த்த பிறகு பாலை சூடேற்ற கூடாது. முன்னதாகவே பாலை சூடாக்கி வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் சேர்க்கவேண்டும்.

மஞ்சள் பால் மிகச்சிறந்த ரத்த சுத்திகரிபபன் ஆகும். பழங்காலத்திலிருந்து இம்முறை பின்பற்றப்படுகிறது. அதோடு உடலில் ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.

உடல் எடைக்கான அடிப்படை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. சரியாக செரிக்காத உணவுகளால் அதிலிருந்து கிடைக்க கூடிய சத்துக்கள் மற்றும் கலோரிகள் கிடைக்காமல் அப்படியே இருப்பதால் எந்த பயனும் இல்லை.

மஞ்சள் பால் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டது. இதனால் உடலில் தாக்கியிருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸுக்கு எதிராக போராடும்.

குறிப்பாக சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அதனை போக்க மஞ்சள் பால் குடிக்கலாம்.

மஞ்சளில் இருக்கும் மினரல்ஸ் செல்களுக்கு ஊட்டம் அளிக்கிறது. இதனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

மஞ்சளில் இருக்கும் மினரல்ஸ்கள் வயிற்றில் சேரும் அதிகப்படியான கொழுப்பினை கரைக்க கூடியது.இதனால் தொப்பை ஏற்படுவது தவிர்க்கப்படும் .

வெள்ளை அடிபோஸ் என்ற திசுவில் தான் அதிகப்படியான கொழுப்பு படிகிறது. மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற தாது இந்த வெள்ளை அடிபோஸில் தங்கியிருக்கும் கொழுப்பினை கரைக்க உதவுகிறது.

அதோடு உடலில் மற்ற பாகங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பினையும் கரைக்கச் செய்கிறது.

அதிக கொழுப்பு பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாருக்கும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக வயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகமாக சேர்வதால் தன இது ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க உடல் எடையைக் குறைப்பது தவிர வேறு வழியில்லை. மஞ்சள் பால் தொடர்ந்து குடித்து இதற்கு நல்ல தீர்வாக அமைந்திடும்.

மஞ்சளில் இருக்கும் சத்துக்கள் கொழுப்பை கரைத்து உடலில் triglyceride அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் டயட் முக்கிய இடம் வகிக்கிறது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுகளிலும் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

மஞ்சளை உங்கள் உணவுகளில் சேர்ப்பதால் அது நம் உடலில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவினை சேர்க்க விடாமல் செய்யும். இதனால் நாம் அதிக கொழுப்பு உணவினை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடிகிறது.

நாம் சாப்பிடும் சர்க்கரைப் பொருள் எனர்ஜியாக மாற்றி அதனை செலவழித்து விட வேண்டும். அப்படியில்லை எனில் அவை கொழுப்பாக மாறிடும்.

தெர்மோஜெனிஸ் (thermogenesis) நம் உடலில் அதிகரிப்பதன் மூலமாக நம்முடைய உடல் எடையை எளிதாக குறைக்க உதவிடும்.

இது இருப்பதால் உடலின் மெட்டபாலிக் ரேட் அதிகரித்து கலோரிகள் விரைந்து எனர்ஜியாக மாற்றப்படுகின்றன.

ஆர்த்தரைட்டீஸால் கை கால் மூட்டுகளில் வீக்கம் ஏற்ப்பட்டிருந்தால் கூடுதலாக வலியிருந்தால் தொடர்ந்து மஞ்சள் பால் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். அதோடு அவை எலும்புக்கும் தசைக்கும் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்துகிறது.

இதனால் கை கால்களில் வலி, முதுகு வலி போன்ற பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சள் பால் குடித்து வர நல்ல பலன் கிடைத்திடும்.

சந்தோசமான வாழ்க்கைக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமானது. சரியாக தூக்கம் இல்லாததால் மன அழுத்தம் தொடங்கி உடல் எடைப் பிரச்சனை வரை ஏற்படுகிறது. மஞ்சள் பால் நன்றாக தூக்கம் வரச் செய்திடும்.

அதோடு மஞ்சள் பால் தொடர்ந்து குடித்து வந்தால் அவை கீமோதெரபியின் பக்க விளைவுகளை குறைக்கவும் செய்திடும்.

மஞ்சள் பால் வயிறு தொடர்பான கோளாறுகளை போக்குவதில் முதன்மையானது. குறிப்பாக அல்சர். உணவு ஒவ்வாமை, உணவு செரிக்காததால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க மஞ்சள் பால் உதவுகிறது.

காய்ச்சல், தலைவலி மற்றும் மூக்கடைப்புக்கு மஞ்சள் பால் சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. அதோடு தொண்டை வறட்சிக்கு மஞ்சள் பால் உடனடி நிவாரணம் வழங்கிடும்.

நீண்ட நாட்களாக நெஞ்சில் சளிக்கட்டியிருக்கும் அதனை நீக்கவும் மஞ்சள் பால் உதவுகிறது.

சில நேரங்களில் தொடர்ந்து துரித உணவுகளையும், மைதா சேர்க்கப்பட்ட உணவுப் பண்டங்களையும் எடுப்பதால் கொழுப்பு அதிகமாக சேர்ந்திடும்.

அதனை கரைக்கவும், உணவு விரைவாக செரிக்கவும் மஞ்சள் பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *