சிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை

சினிமா
ஸ்ரீதேவியின் மெழுகு சிலை அருகே ஜான்வி கபூர்
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்து பின்னர் இந்திய திரையுலகம் முழுக்க லேடி சூப்பர் ஸ்டாராக பவனிவந்தவர் ஸ்ரீதேவி. கடந்த ஆண்டு மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் தத்ரூபமாக மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்துள்ளது.
இந்த சிலை உருவாக்கம் பற்றிய வீடியோ ஒன்று மேடம் துசாட்ஸின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், ’ஸ்ரீதேவி எங்கள் மனதில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் மனங்களிலும் என்றென்றும் வாழ்வார். என்று கூறியுள்ளார்.
ஸ்ரீதேவி மெழுகு சிலையுடன் போட்டோ எடுத்த அவரின் குடும்பத்தினர்
மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் அமைத்துள்ள ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை, அவரின் குடும்பத்தினர் இன்று நேரில் சென்று பார்த்தனர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் மெழுகு சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதற்கு முன்னதாக கஜோல், கரண் ஜோஹர், ஷாருக்கான், வருண் தவான், சன்னி லியோன், அனில் கபூர், கரினா கபூர், கேத்ரினா கைப், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன், சல்மான் கான், மாதுரி தீக்‌ஷித், சத்யராஜ் உள்ளிட்டோரின் சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *