சிக்கன் கீமா பிரியாணி செய்வது எப்படி,keema biryani, keema biryani in tamil, keema biryani recipe, keema biryani easy, egg keema biryani, recipe of keema biryani, mutton keema biryani vahchef

ஆரோக்கிய சமையல்

 

தேவையான பொருட்கள்

சிக்கன் – அரை கிலோ (கொத்திய கறி)
வெங்காயம் – 1
தக்காளி – 1
கரம் மசாலாத்தூள் – 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் விழுது – அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
பட்டை – சிறிது
தயிர் – முக்கால் கப்
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
பாசுமதி அரிசி – 3 கப்
கிராம்பு – 4
ஏலக்காய் – 4
பிரியாணி இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொத்திய சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

பாசுமதி அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.

சுத்தம் செய்த சிக்கனில் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது 1 மணி நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஊற விட வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டையை போட்டு தாளித்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் ஊற வைத்துள்ள கோழிக்கறி துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

அதன் பின்பு மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வதக்க வேண்டும்.

பின்பு சிறிது கரம் மசாலா, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

அதனுடன் ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும்.

வெந்தவுடன் இறக்கி, சிறிது நெய் விட்டுக் பரிமாறவும்..

சூப்பரான சிக்கன் கீமா பிரியாணி ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *