சாமியார் நித்தியானந்தாவின் 19 வயது பெண் சிஷ்யை கடத்தப்பட்டாரா? அவரே வெளியிட்ட பரபரப்பு வீடியோ

சினிமா

 

சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யையான மா நித்தியானந்திதா கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் பரபரப்பு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

சாமியார் நித்தியானந்தாவின் சிஷ்யையான மா நித்தியானந்திதா (19) கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்தில் அவரை மோசமாக திட்டி வீடியோ வெளியிட்டது முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மா நித்தியாந்திதா கடத்தப்பட்டு தனிமையான இடத்தில் வைக்கப்பட்டதாக சில நாட்களாக செய்தி பரவியது.

இது குறித்து விளக்கமளித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் கடத்தப்படவில்லை என்பதையும் பாதுகாப்பாக உள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

என் விருப்பப்படி நான் எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன் என கூறினார்.

இதற்கு பின்னர் அவர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதாவது தன்னுடைய பெற்றோரே தான் கடத்தப்பட்டதாக வதந்தி பரப்பி தன்னை மன அழுத்தத்துக்கு ஆளாக்குவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் தன்னை சித்திரவதை செய்ய, எந்த எல்லைக்கும் தன் பெற்றோர் போவார்கள் எனவும் சாமியார் நித்தியானந்தா மற்றும் அவரின் ஆசிரமத்தால் தனக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *