சர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா! திருமணத்தின் பின்னர் வெடித்த பிரச்சினை? கொந்தளிக்கும் தமிழர்கள்

சினிமா

பிரபல டிவியில் தொகுப்பாளராக வளம் வரும் தொகுப்பாளினி பிரியங்காவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்நிலையில், அண்மைய காலமாக அவர் சில சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.

அவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று கோடான கோடி தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரபல டிவியின் மணி மகுடமாக இருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கராகும்.

எனினும், அந்த நிகழ்ச்சியை பரபரப்பாகவும், சுவாரஷ்யமாகவும் கொண்டு செல்ல பிரியங்கா செய்யும் வேலைகள் பார்வையாளருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் மூக்குத்தி முருகன் என்ற போட்டியாளர் பிரியங்கா மீது “ஆசை” வைத்து இருக்கிறாராம், பிரியங்கா செந்தில் மீது “ஆசை” வைத்து இருக்காராம்.

தன் புருஷன் செந்தில் பிரியங்காவை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வது ராஜலட்சுமியின் வேலையாம். இந்த கான்செப்டை வச்சு, இவங்க பண்ற கேலிக் கூத்து நிஜமா கலாச்சார சீரழிவு என்று பலர் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

இப்படி முக்கோண காதலில், கல்யாணமானவர்கள் சிக்கிக்கொள்ள, இதை நடுவர்கள் பார்த்து, ரசித்து சிரிக்கிறார்கள். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இனிவரும் காலத்தில் அவரின் திறமைகளை மாத்திரம் வெளிப்படுத்தினால் போதும், நிழ்ச்சியை சுவாரஷ்யமாக்க இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *