சரவணபவன் ராஜகோபால் வ ழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஜீவஜோதியின் நீண்டநாள் கனவு நிறைவேறியது! என்ன தெரியுமா?

சினிமா

சரவணபவன் ஹொட்டல் ராஜகோபால் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஜீவஜோதி நேற்று புதிதாக ஹொட்டல் திறந்துள்ள நிலையில் அரசியல் பாதையை தேர்வு செய்தது குறித்து பேசியுள்ளார்.

ஹொட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தன் கடையில் பணிபுரிந்த மேலாளரின் மகள் ஜீவஜோதியை அடைய நினைத்தார்.

ஆனால் ஜீவஜோதி தான் காதலித்து வந்த பிரின்ஸ் சாந்தகுமாரை கரம் பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால் கூலிப்படையை ஏவி பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்தார்.

இந்த விவகாரத்தில் ராஜகோபாலுக்கு எதிராக ஜீவஜோதி நீண்ட சட்ட போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில் இரண்டாவதாக தண்டபாணி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜீவஜோதி வேதராசு என்பவரிடம் தன் சொத்துக்களை அடமானம் வைத்துவிட்டு அவர் வீட்டுக்கே சென்று அடமான பத்திரத்தை எடுத்து சென்றதாக அவர் மீது சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்கிய நிலையில் மீண்டும் செய்திகளில் ஜீவஜோதியின் பெயர் அடிப்பட்டுள்ளது.

அதாவது, நேற்று தஞ்சையில் புதிய ஹொட்டலை திறந்த ஜீவஜோதி, பாஜகவில் இணைந்து கட்சி பணியாற்றவுள்ளார்.

இது குறித்து விகடன் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ஜீவஜோதியின் உறவினர்கள், ராஜகோபால் மீது வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே தஞ்சையில் சிறிய அளவில் மகளிர் தையல் கடை ஒன்றை நடத்தி வந்தார் ஜீவஜோதி.

அதன்பிறகு சைவ ஹொட்டலை நடத்திய அவர் சில வருடங்களில் அதை மூடிவிட்டார்.

அத்துடன் ரஹ்மான் நகரில் தனது மகன் பவின் பெயரில் சிறிய அளவில் அசைவ ஹொட்டலை ஒன்றைத் தொடங்கி நடத்தினார். அதையும் சில மாதங்களுக்கு முன்பு மூடிவிட்டார்.

இதையடுத்து, இனி ஹொட்டல் திறந்தால் கொஞ்சம் பெரிய அளவில் திறக்க வேண்டும் என்று நினைத்தவர் தற்போது தன் தந்தை ராமசாமி பெயரில் திறந்திருக்கிறார் என கூறினர்.

ஜீவஜோதி கூறுகையில், ஒரு பெரிய ஹொட்டல் நடத்த வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் கனவு. இது தவிர அரசியலுக்கு வந்தால் பொருளாதாரம் என்பது முக்கியம். அதனையொட்டியே, என் குடும்பத்தினர் கவனித்துக் கொள்ளும்வகையில் புதிய ஹோட்டலைத் தொடங்கியிருக்கிறேன்.

நிரந்தர வருமானம் வந்து கொண்டிருந்தால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அரசியலில் இறங்கி வேலை செய்யலாம் என்பதால் இதை செய்தேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *