க்ளாமரை ஃபீல் பண்ணுங்க… ஷேர் பண்ணுங்க!

சினிமா

இன்ஸ்டாவில் க்ளாமர் டால்பினாக துள்ளுகிறார் யாஷிகா ஆனந்த். மார்ஷியல் ஆர்ட்ஸிலும் பின்னி பெடலெடுக்கும் பொண்ணு, இப்போது வெப்சீரீஸ் ஒன்றிலும்; மகத், ஆரவ், தம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோரின் படங்களிலும் பளபளக்கிறார். யாஷுடன் ஒரு ஜாலி chat!


‘‘இந்த வருஷம் ரொம்ப நல்லா போயிருக்கு. வருஷ துவக்கத்துலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச கோவையில் இருந்தேன். முதல் ஈவன்ட் அது. என்னோட ஷோ பார்க்க மூவாயிரம் ஆடியன்ஸுக்கு மேல வந்திருந்தாங்க. என்னோட ஃபேமிலியும் அங்க இருந்தது. அப்புறம், நான் நடிச்ச ‘ஜாம்பி’ நல்லா ரீச் ஆகியிருந்தது. நிறைய பாராட்டுக்கள். இந்த புதுவருஷமும் பிரைட்ஃபுல்லா இருக்கும். வெப்சீரீஸ் ரிலீஸ் ஆகுது.

முதன்முறையா கன்னடம் போறேன். மகத்துடன் நடிச்ச ‘இவன் உத்தமனா’ தமிழ் தவிர கன்னடத்திலும் ரிலீஸ் ஆகுது. ‘ராஜபீமா’வில் கே.எஸ்.ரவிக்குமார் சார் காம்பினேஷன்ல நிறைய சீன்ஸ் நடிச்சிருக்கேன். ஆக்‌ஷன் சீக்குவென்ஸும் இருக்கு. உமாபதியுடன் நடிக்கும் ‘சிறுத்தை சிவா’ படப்பிடிப்பும் பரபரக்குது…’’ படபட பட்டர்ஃப்ளையாக பறக்கிறார் யாஷிகா.கால்ல சிராய்ப்பு… என்னாச்சு?

விசாரிச்சதுக்கு தேங்க்ஸ் பாஸ். கால்ல பெரிய காயமில்ல. சின்ன சிராய்ப்புதான். நான் புல்லட் கூட ஓட்டிட்டு போயிருக்கேன். அப்பகூட கீழ விழுந்ததில்ல. ஆனா, ஃப்ரெண்ட் பைக்ல பின்னாடி உட்காந்து போகும்போது விழுந்துட்டேன். இப்ப ஆல்ரைட். சரியாகிடுச்சு.ஒரு பாடலுக்கும் ஆடறீங்க போல..?

இல்லீங்க! ‘கழுகு 2’ பண்ணினேன். கிருஷ்ணா என் ஃப்ரெண்ட். அவர் கேட்டதால ஆடினேன். இப்ப லீட் ரோல்ஸ் அதிகம் பண்றேன். இடையே ஒரு வெப்சீரீஸ் ஷூட்டும் போயிட்டிருக்கு. கேரக்டர் ரோல்களும் பண்ற ஐடியா இருக்கு. ஒரு பாடலுக்கு ஆடுற ஐடியா இல்ல !
யார் யாருக்கு போட்டி?

யாருக்கும் இல்ல! யாஷுக்கு போட்டி யாஷேதான். யெஸ். இன்னிக்கு நான் இந்த இமேஜில் இருப்பேன்னு நீங்க நினைச்சா, அது அப்படியே தொடர விடமாட்டேன். நாளைக்கு வேற இமேஜில் இருப்பேன்.யாஷி ஒரு foodieயாமே..?

ட்ரூ! எப்போ பசிக்குதோ அப்ப ஒரு வெட்டு வெட்டுவேன். எவ்வளவு அதிகம் சாப்பிடறேனோ அவ்ளோ ஒர்க் அவுட்டும் பண்ணிடுவேன்.

யாஷிக்கு சமைக்கவும் தெரியும். சாம்பார், ரசம், ஆம்லெட், டீ இதெல்லாம் தெரியும். கிச்சன் குயின் ஆக இன்னும் டைம் இருக்கு! சினிமா இண்டஸ்ட்ரீ
யில ஆக்ட்ரஸ்னாலே ஷேப் ரொம்ப அவசியம். இதுக்காகவே நாம உடலழகையும் மெயின்டெயின் பண்ணியாகணும். ஸோ, ஃபிட்னஸ் பண்ணினாத்தான் சரியா இருக்கும்.

ஜிம்முக்கு போனா, வெயிட் லிஃப்ட்டிங்கைவிட, கார்டியோ, கிராஸ்ஃபிட் மாதிரி ஒர்க் அவுட்ஸ்தான் என் சாய்ஸ். என்னோட ஃபிட்னஸ்ல பெரும் பங்கு என் ஃப்ரெண்ட் ஆர்த்திக்கும் உண்டு. அவங்க பெஸ்ட் டிரெயினர்.இன்ஸ்டாவில் செம க்ளாமரா போட்டோஷூட் அள்ளுதே..?

அது மாடர்ன் ஷூட்தான். க்ளாமர் ஷூட் இல்ல. க்ளாமர்ங்கறது பார்க்கறவங்க கண்ணுல இருக்கு. பாலிவுட்ல இப்படி ஷூட் சகஜம்தான் பாஸ்! ஃபீல் பண்ணாமல் லைக், கமெண்ட்ஸ் பண்ணுங்க! ஷேர் பண்ணுங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *