கோடையில் முடி கொட்டுவதற்கு என்ன காரணம்?, What causes hair loss in the summer?

அழகுக் குறிப்புகள்

பொதுவாக கோடையில் சருமத்திற்கு மட்டும் தான் அதிக அக்கறை காட்டுவோம், பராமரிப்புக்களையும் வழங்குவோம். ஆனால் தலையில் உள்ள முடியைப் பற்றி சிறிதும் கண்டு கொள்ளமாட்டோம். சிலருக்கு கோடையில் முடி அதிகம் உதிரும்.

* கோடையில் வெயில் அதிகம் உள்ளது என்று, பலரும் நீச்சல் குளித்தில் அதிக நேரம் செலவழிப்பார்கள். நீச்சல் குளத்தில் உள்ள நீரில் உள்ள குளோரின் முடியின் எதிரி. இந்த குளோரின் ஸ்கால்ப்பில் பட்டால், மயிர்கால்களை வலிமையிழக்கச் செய்து, முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே நீச்சல் குளத்தில் இறக்கும் முன்னும், பின்னும் நல்ல சுத்தமான நீரில் முடியை அலசிக் கொள்ளவும்.

* சூரியனின் கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்திலும், முடியிலும் படுமாயின், அதனால் அதிகம் பாதிக்கப்படுவதோடு, அளவுக்கு அதிகமாக வறட்சியடைந்து, முடி உதிர ஆரம்பிக்கும். எனவே வெயிலில் செல்லும் முன், தலைக்கு ஏதேனும் தொப்பி அல்லது துணி அல்லது குடையை கொண்டு தலை முடியை மறைத்தவாறு செல்லுங்கள்.

* கோடையில் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தினால், முடி மேலும் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும். எனவே கோடையில் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

* தலைக்கு ஹேர் ஜெல், ஷாம்பு போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக கெமிக்கல் அதிகம் கலந்த ஷாம்புக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள கெமிக்கலானது சூரியக்கதிர்களில் தொடர்ந்து படும் போது, அதனால் முடி உதிர ஆரம்பிக்கும்.

* கோடையில் அதிகம் வியர்க்கும் இதனால் முடியை இறுக்கமாக கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இறுக்கமாக கட்டினால், வியர்வையினால் மயிர்கால்கள் தளர்ந்து முடி அதிகம் உதிர ஆரம்பிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *