” கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனா அரசே காரணம் ” முதல் முதல் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட பெண் கிக்ஸியன் குற்றச்சாட்டு..! இது தான் நடந்ததாம்…!!

செய்தி

உலகில் இத்தனை உயிர்கள் கொரொனாவால் பலியாவதற்கு சீனா அரசே காரணம் என கொரொனா வைரஸால் முதல் முதல் பாதிக்கப் பட்டதாக கூறப்படும், 57 வயதான கிக்ஸியன் என்ற பெண் தெரிவித்துள்ளார். வுஹான் நகரில் கடல் மார்கெட்டில் இறால் விற்பனை செய்து வந்த கிக்ஸியன் தற்போது முழுமையாக கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்திருக்கிறார்.

 

கிக்ஸியன் இது குறித்து தெரிவிக்கையில் டிசம்பர் மாத ஆரம்பத்தில் எனக்கு சளி, இருமல் மற்றும் கடுமையான உடல் வலி ஏற்பட்டது. அருகில் இருந்த மருத்துவரிடம் மருந்து எடுத்தேன் இருப்பினும் குணமாகவில்லை. அதன் பின் அரச மருத்துவ மனைக்கு சென்றேன் அங்கு மருந்து எடுத்தேன், அவர்களும் பரிசோதனை செய்துவிட்டு மருந்து தந்தார்கள். அதுவும் சரி வரவில்லை. காய்ச்சல் அதிகமானது..

இதனால் வுஹானின் உள்ள நவீன வசதிகள் கொண்ட மருத்துவ மனைக்கு சென்றேன் அங்கு பரிசோதனை செய்த வைத்தியர்கள் என் நோய் பற்றி கண்டறிந்தனர். அதன் வீரியத்தை பற்றி கூறி தனிமை படுத்த வேண்டும் என்றனர். அதன் பின் தான் நான் தனிமை படுத்தப் பட்டேன். டிசம்பர் முதல் பகுதியில் எனக்கு இந்த நோய் ஆரம்பித்து டிசம்பர் 16 தான் தனிமை படுத்தப் பட்டேன்.

இந்த நிலையில் நான் இருந்த கடல் உணவு சந்தியில் எனது நோய் அறிகுறிகளுடன் 27 பேர் வரை வந்தனர். இதனால் கடல் உணவுகளில் இருந்து பரவி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடல் உணவு சந்தையை முற்றாக மூடினார்கள். அது பற்றி ஆய்வு செய்த போது கடல் உணவில் இருந்து பரவவில்லை என்பது உறுதியானது. ஆனாப் எப்படி வந்தது என்பது தெரியவில்லை.

 

ஆனால் இதனை அப்போதே தடுத்திருக்கலாம். எனக்கு முறையான பரிசோதனை வேகமாக பரவும் நோய் என்பதால் எமது பகுதியை தனிமை படுத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் உலகம் முழுவதும் பரவும் வாய்ப்பு குறைந்திருக்கும். இதற்காக சீனா அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது. அந்த இடைவெளி பொதுமானதாக இருந்தது கொரோனா உலகம் முழுவதும் பரவுவதற்கு என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கிக்ஸியன் கண்டறிய பட முதல் அதாவது டிசம்பர் 1ம் திகதி வேறு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக சீனா கண்டுபிடித்தது என்ற தகவலும் உள்ளது. அதாவது டிசம்பர் முதலாம் திகதி முதல் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர் இனங்காணப் பட்டார் என்ற தகவலும் உள்ளது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *