கொரோனா வைரஸால் மரணமடைந்த 12 வயது சிறுமி..!! கதறி துடிக்கும் பெற்றோர்..!

செய்தி

பெல்ஜியத்தில் கொடிய கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழப்பதற்கு 3 தினங்களுக்கு முன்னர் சிறுமிக்கு காய்ச்சல் இருந்தது, மேலும் சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர் 700க்கும் மேற்பட்டவர்களில் இளையவர் இச்சிறுமி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுமிக்கு வேறு ஏதேனும் அடிப்படை உடல் நலப் பிரச்சினைகள் உள்ளதா என்பது உட்பட வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

இது உணர்ச்சி பூர்வமாக கடினமான தருணம், இருப்பினும் இது குழந்தையை பற்றியது, மேலும் மருத்துவ மற்றும் அறிவியல் சமூகத்தையும் வருத்தப்படுத்தியுள்ளது என தேசிய நெருக்கடி மைய செய்தித் தொடர்பாளர் இம்மானுவேல் ஆண்ட்ரே கூறினார். நாங்கள் அவரது குடும்பத்தினர் நண்பர்களின் மனநிலை தொடர்பாக நினைத்துக்கொண்டிருக்கிறோம், இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு, ஆனால் இது நம்மை பெரிதும் பாதிக்கிறது என்று அவர் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோயால் 98 பேர் உயிரிழந்து விட்டதாக அவர் கூறினார். பெல்ஜியத்தில் 705 பேர் உயிரிழந்துள்ள நிலையில்12,705 க்கும் மேற்பட்ட வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *