கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்துள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு!

செய்தி

கொடிய கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பு மருந்து கண்டு பிடித்துள்ளதாக பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன் அறிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கே தண்ணி காட்டி வரும் கொரோனா வைரசுக்கு தங்கள் நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த ஆராய்சிக்காக, அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்து பார்க்கப்படும் எனவும், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு ஆராய்ச்சி பணிக்காக செலவிடப்பட்ட தொகையை தவிர, வேறு எந்த இலாபத்திற்கும் இந்த தடுப்பு மருந்து விற்கப்படமாட்டாது எனவும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல், அமெரிக்க மருந்து பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான அபோட் கண்டுபிடித்த கொரோனா சோதனை கருவியும் விரைவில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என அபோட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *