கொரோனா பற்றி தவறாக புரிந்துகொண்ட மக்கள்…கொரோனா வைரஸ் என்றால் இது தான்…உண்மையை கூறிய டாக்டர் பவித்ரா வெங்கட கோபாலன்..!!

செய்தி

கொரோனா வைரஸ் பற்றிய பலரின் கேள்விகளுக்கும், பயத்திற்கும் பிரபல வைத்தியர் பவித்ரா வெங்கட கோபாலன் அவர்கள் கொடுத்துள்ள விளக்கம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. 2006ம் ஆண்டு தொடக்கம் 12 வரை pH,D முடித்து பின் தொற்று நோய் மற்றும் வைரஸ் குறித்த ஆரச்சியில் வெற்றிபெற்ற பவித்ரா கொரொனா வைரஸ் பற்றி தெளிவு படுத்தியுள்ளார். 1950 களில் பரவிய வைரஸின் குடும்பத்தில் இருந்து வந்த கொரொனா வைரஸ் மற்றைய வைரஸுகளுடன் ஒப்பிடும் போது உயிர் கொல்லி வைரஸ் அல்ல.

ஆனால் மோசமாக பரவும் வைரஸ். கொரோனா வைரஸ் பற்றிய பல தவறான செய்திகள் வெளியாகி வருகிறது, அதாவது மாமிசம் சாப்பிட்டால் அதிகரிக்கும், இளைஞர்களுக்கு தொற்றாது, தண்ணீர் குடித்தால் பரவாது, வெயிலில் பரவாது போன்ற விடயங்கள். ஆனால் இவை அனைத்தும் பொய் தான். கொரொனா வைரஸின் தாக்கம் வெயில் வெப்பத்தின் போது குறையுமே இன்றி அழியாது.

உங்கள் அருகில் இருந்து ஒருவர் தும்மினால் கொளுத்தும் வெயிலாக இருந்தாலும் கொரோனா வைரஸ் உங்களை தொற்றும். அதே 1.5 மீட்டர் தூரத்தில் இருந்தால் தொற்றாது இதற்கிடையில் கொரொனா வைரஸ் அழியலாம். உங்கள் எச்சரிக்கை மட்டுமே உங்களை காப்பாற்றும். சிலர் இளைஞர்களுக்கு தொற்றாது என்கின்றனர். ஆனால் நோயெதிர்ப்பு சக்தி இல்லாத அனைவரையும் கொரோனா தொற்றும்.

அதிலும் வேறு நோய்களால் பாதிக்கப் பட்டிருப்பவர்களுக்கு வேகமாக தொற்றும், இதனால் தான் முதியவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கும் போது குணப்படுத்துவது கடினமாகிறது. அதே நேரம் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கொரோனா வைரஸ் மிகவும் குறைவாகவே தாக்குகிறது. இவர்களை இலகுவில் காப்பாற்றி விடலாம்.

அதே போல் நோயெதிர்ப்பு சக்தி உள்ள , இளைஞர் , முதியவர்களை கூட கொரோனா தாக்குவது குறைவு தான். ஒன்றை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சீனர்கள் போல் இன்றி வழமையாக நாம் உண்ணும் மாமிசங்களை உண்ணலாம். சுத்தமான முறையில் சமைத்து உண்ணலாம். சமைத்து உண்ணுங்கள் என்பதன் அர்த்தம் பச்சையாக உண்ண வேண்டாம் என்பது தான்.

இதனால் எந்த ஆபத்தும் இல்லை. அடுத்து தண்ணீர் குடித்தால் கொரோனா தாக்காது என்பது பொய். உடலின் ஆரோக்கியம் , அதிகரிக்கவும், உடல் உற்சாகமாக இருக்கவும் நீர் அதிகம் குடிக்க வேண்டும். எந்த வைரஸையும் எதிர்த்து போராட உடல் ஆரோக்கியம் அவசியமாகும். இதற்காகவே தண்ணீர் குடிப்பது அவசியம். இதில் ஒன்றை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

டெங்கு போன்ற நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. இது போல் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படாத ஏராளமான நோய்கள் உண்டு. அதில் இருந்து மீண்ட எமக்கு கொரோனா வைரஸ் என்பது சாதாரண தொற்று நோயாகும். இதனை மக்களே அழிக்கலாம். இதற்கு மருந்து கூட தேவையில்லை. ஆனால் பரவாமல் தடுக்க வேண்டும் . அது உங்கள் கையில் தான் என டாக்டர் பவித்ரா வெங்கட் கோபாலன் மேலும் தெரிவித்துள்ளார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *