கொரோனா எவ்வாறு பரவுகிறது? ஜப்பான் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி! அனைவருக்கும் அவசியமானது

செய்தி
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கள் 30 ஆயிரத்தையும் தாண்டிச் சென்றுள்ளது.
நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொரோனா வைரஸிற்கு இலக்காகி மரணித்து கொண்டிருக்கின்றன.
இவற்றுக்கு எல்லாம் யார் பொறுப்பு? அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றத் தவறும் சில நபர்களினால் ஏற்பட்ட விபரீதமே இதற்கு காரணமாகும்.
இதுவரை கொரோனா வைரஸ் பரவலுக்கு இலக்காக அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடாக இத்தாலி பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு பத்தாயிரத்தை தாண்டிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
சரியான பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் பல பகுதிகளுக்குள் நோயாளிகள் நடமாடியதே இதற்கு பிரதான காரணமாகும்.
வைரஸின் பரவல் தொடர்பில் தெளிவில்லாமல் மக்கள் செயற்படுவதை உலக சுகாதார அமைப்பு கூட எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகின்றது என்பது தொடர்பில் ஜப்பான் ஆவண காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளி ஒருவர் தும்மினால் அதிலிருந்து வெளியேறும் கிருமிகள் சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு  அந்தப் பகுதியிலேயே பரவும். அதனூடாக பயணிப்போர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் அவல நிலை ஏற்படும்.
கொரோனா நோயாளி ஒருவருடன் இன்னொருவர் நெருக்கமாக பேசும் பாதிக்கப்பட்டவரின் எச்சலிலிருந்து கிருமிகள் மற்றவரை இலகுவாக தாக்கும்.
பொதுவான இடங்களில் கூட்டமாக மக்கள் ஒன்றுகூடும் போது சுமார் 10 sec இடைவெளியில் கொரோனா வைரஸ் அனைவர் மீது பரவும் தன்மையை கொண்டுள்ளது.
தொடுகையின் மூலம் மாத்திரமன்றி காற்றின் மூலமும் விரைவாக கொரோனா தொற்று ஏற்படும் என ஜப்பான் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதன் காரணமாக குறிப்பிட்ட சில வாரங்களில் சுமார் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். இவர்களில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த பேராபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வீட்டுக்குள் இருந்து எம்மையும் நம் சார்ந்த சமூகத்தினரையும் காப்பாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். வெளியில் செல்லும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கூட்டமாக நிற்பதை முற்றாக தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் இடையில் குறைந்து இரண்டு அடி இடைவெளியில் பேசுவது சிறந்ததாகும்.
சீனாவின் வுஹான் மாநிலத்தில் உருபெற்ற கொரோனா வைரஸ் இன்று 180 நாடுகளுக்கு வியாப்பித்துள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றத் தவறும் பட்சத்தில் ஒட்டுமொத்த உலகமும் அழிந்து போனாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
அனைவரும் வீட்டில் இருங்கள். முக கவசத்தை மறக்காமல் அணியுங்கள். கொரோனா வைரஸ் இல்லாத உலகத்தை இன்றே ஏற்படுத்துவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *