கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருப்பதால் மன வேதனை அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 12 வயது சிறுவன்!

குற்றம்

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் ஒருவர் பெற்றோர்களுடன் வசித்து வந்தான். இவன் சம்பவ தினமன்று நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் தனது அறைக்கு தூங்க சென்றுள்ளான். மறுநாள் காலையில் பெற்றோர்கள் சிறுவனின் அறைக்கு 7.30 மணியளவில் சென்று பார்க்கையில் சிறுவன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுவனை மீட்டு பெற்றோர்கள், அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த சிறுவனை மருத்துவமனையில் சோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் முன்னரே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் இந்த தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவன் தான் வீட்டிலேயே முடங்கி இருப்பதன் காரணமாக அதிகளவு மன உளைச்சலில் இருப்பதாக தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளான்.

 

சிறுவனின் தந்தை கூறிய சமயத்தில் ஊரடங்கு துவங்குவதற்கு முன்னதாக சிறுவன் மாலை வேளைகளில் சைக்கிளில் பயணம் செய்வதும், பூங்காவில் விளையாடுவதுமாக இருந்துள்ளான். ஊரடங்கில் வெளியே செல்ல அனுமதியில்லாத காரணத்தால், இம்முடிவை மகன் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *