கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி.!? இதோ உங்களுக்காக…!!

செய்தி

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே மக்கள் பயத்தில் உறைந்து போகும் அளவிற்கு பரவி வருகிறது. இதுவரை 34 ஆயிரத்து 26 பேர் இதுவரை மரணித்துள்ள நிலையில் 7 லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த வைரஸில் இருந்து விடுபடுவதற்கு அனைத்து நாட்டு அரசும் மக்களின் உதவியுடன் முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் குழந்தைகளை பெற்றோர் பராமரிக்கும் முறைகள் பற்றி வைத்தியர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். கரணம் பல நாடுகளில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில் பெற்றோர் குழந்தைகளை வழமை போல் விளையாட விடுங்கின்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள டாக்டர் அபிஷேக்.

கொரொனா வைரஸ் தரையில் சுமார் 5 தொடக்கம் 7 மணி நேரங்கள் உயிர் வாழக் கூடியது. குழந்தைகள் வெளியே தரைகளில் விளையாடுவதால் குழந்தைகளை தாக்கும் அபாயம் உள்ளது. அதே போல் வீட்டில் விடும் போதும் பாதுகாப்பாக இருங்கள். குழந்தைகளை தரையில் விடுவதற்கு முன் தரையை சுத்தம் செய்யுங்கள். குழந்தையை விளையாடியதும் குளிக்க வேண்டும் என்பதை உணர்த்துங்கள்.

ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் அதிகம் கவனம் செலுத்துங்கள். பாடசாலை விடுமுறை என்பதால் வீட்டை விட்டு வெளியே செல்லவே சிறுவர்கள் துடிப்பார்கள். ஆனால் வெளியே நண்பர்கள் உருவத்தில் கூட கொரோனா தொற்று ஏற்படலாம். வந்ததும் ஆடைகளை கழுவி குளிக்க வைய்யுங்கள். விடுமுறை காலத்தில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்யுங்கள், பேசுங்கள்.

சில சிறுவர்கள் மன உளைச்சலில் இருப்பார்கள் அவர்களுக்கு உங்கள் அன்பு தேவைப்படுகிறது. அதே போல் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை சமைத்து கொடுங்கள். குறிப்பாக கீரை பச்சை காய்கறிகள் அதிகம் கொடுங்கள். இதனால் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிம்கும். கிடைத்துள்ள நாட்களை பயனுள்ளதாக மாற்றுங்கள் என தெரிவித்துள்ளார்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *