கொரோனாவின் காதலி யார்.? கன்னியாகுமரி இளைஞர்களை அதிர வைத்த பொலீஸார்..! இதோ வைரலாகும் புகைப்படம்..!!

செய்தி

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் வேகம் அதிகரித்துள்ளதுடன் மரணங்களும் அதிகரித்துள்ளது. இதுவரை 979 பேர் பாதிக்கப் பட்டுள்ளதுடன் 25 பேர் மரணமடைந்துள்ளனர். தமிழ் நாட்டில் மட்டும் 50 பேர் பாதிக்கப் பட்டதுடன் 1 மரணமடைந்துள்ளார். இதனால் அரசும் வைத்தியர்களும் கொரோனாவை தடுக்க போராடி வருகின்றனர்.

இதனால் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது. இருப்பினும் இளைஞர்கள் வீட்டில் இருக்காமல் வீதிகளில் பைக்கில் சுற்றுகின்றனர், இதனால் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் பலமுறை கொரோனா பற்றி எடுத்துக் கூறியும் கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை. இதனால் தற்போது பொலீஸார் வித்தியாசமான தண்டனைகளை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அதில் கன்னியாகுமரி பொலீஸார் வித்தியாசமாக யோசித்துள்ளனர். கொரோனா விழிப்புணர்வு பரீச்சை பேப்பர் ஒன்றினை தயார் செய்து பதில் எழுதும் படி கொடுத்துள்ளனர். அதில் பத்துக்கு பத்து புள்ளி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டுக்கு போக முடியாது என்பது தண்டனை.

நம்ம பசங்க உசார் என்பதால் பொலீஸார் கொடுத்துள்ள கேள்வி ஒன்று சிரிக்க வைத்துள்ளது. அதாவது கொரோனா வைரஸின் காதலி யார்.? இதனை பார்த்த பலரும் பொலீஸாரின் தண்டனையை பாராட்டி வருகின்றனர் சரி நீங்கள் சொல்லுங்கள்.. கொரோனாவின் காதலி யார்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *