கொரோனாவால் மரணமடைந்த நபரின் சடலம் உறவினர் யாரும் இன்றி நள்ளிரவு 12 மணிக்கு நீர்கொழும்பில் எரியூட்டப் பட்டது..! மனதை பதபதைக்க வைக்கும் புகைப்படங்கள்…!

செய்தி

இலங்கையில் கொரொனா வைரஸின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இது வரை 122 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இதில் 14 பேர் முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு சென்றதுடன் 2 மரணமடைந்துள்ளனர். இதில் இரண்டாவதாக நேற்று மரணமடைந்த நபர் தொடர்பில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளித்துள்ளது.

நீர்கொழும்பு கொச்சிக் கடை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை சாதாரண நோயாளியாக காண்பித்து தனியார் மருத்துவ மனையில் மருத்துவம் பார்த்துள்ளார். இவர் தனது உண்மையான நோயை மறைந்து சாதாரண பரிசோதனையை தனியார் மருத்துவ மனையில் செய்துள்ளார். பின் நோய் மோசமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு வரப் பட்டுள்ளார்.

அப்போதும் அவர் தன்னை சாதாரண நோயாளி போலவே காண்பித்துள்ளார். ஆனால் வைத்தியர்களின் சந்தேகத்தின் பேரில் அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப் பட்ட நிலையில் கொரோனா உறுதி செய்யப் பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக இவரை IDH க்கு கொண்டு செல்ல முயன்ற போது வைரஸின் தீவிரத்தால் மரணமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவருக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர்கள் உட்பட சுமார் 30 பேர் தனிமை படுத்தப் பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இவரது உடல் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நீர்கொழும்பு மாநகர சபை கல்லறையில் பாதுகாப்பாக எரிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா வைரஸினால் ஒருவர் மரணமடைந்தால் குடும்பத்தில் இருவர் பாதுகாப்புடன் சடலத்தை அடையாளம் காட்டவும் நல்லடக்கத்தில் கலந்து கொள்ளவும் இலங்கையில் சட்டம் உண்டு. இருப்பினும் குறித்த நபரின் இறுதி கிரியைக்கு குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட வராத நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலை பிரதானிகள், கொச்சிக்கடை பொலீஸ் அதிகாரிகள், பிரதேச பொது சுகாதார அதிகாரிகளின் வழி காட்டலின் படி சடலம் எரியூட்டப் பட்டுள்ளது.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *