கொரொனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்.!? நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானியின் கணிப்பு..!!

செய்தி

கொரோனா வைரஸின் கோர தாண்டவம் எப்போது முடியும் என அனைவரும் எதிர் பார்த்திருக்கும் நிலையில் அடுத்த மாதம் குறையும் என Michael levitt கூறி இருப்பது உலக தலைவர்களிடத்தில் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பிரபல விஞ்ஞானியாக Michael Levitt நோபல் பரிசு பெற்றவராவார்.

சரி இவர் சொன்னதும் கொரொனா வைரஸ் குறையவா போகுது என்ற கேள்வி மக்களிடம் எழுவது சாதாரண விடயம் தான்.ஆனால் Michael எந்த ஒரு விடயத்தையும் இலகுவாக கணிக்கக் கூடியவர். சீனாவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போது சீனாவின் சுமார் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது,

இதில் நிச்சயம் 3 ஆயிரத்துக்கு அதிகமானோர் மரணிக்கலாம் அத்துடன் சீனா இதில் இருந்து வேகமாக மீண்டு விடும் என குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது போலவே 81 ஆயிரம் மக்கள் சீனாவில் பாதிக்கப் பட்ட நிலையில் 3304 வரை மரணமடைந்தனர். இதனால் Michael கூறியது நடக்கலாம் என்ற நம்பிக்கை உலக தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகிறது. அத்துடன் மக்களும் முடிந்த அளவு ஆதரவு வழங்கி வருகின்றனர். மக்களின் ஆதரவு தொடர்ந்தால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Michael அவர்களின் கணிப்பு உண்மையாகிவிடும்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *