கொரொனா வைரஸால் மரணமடைந்தால் அவரது உடலை என்ன செய்கிறார்கள் தெரியுமா.!? இதோ முழு விபரம் புகைப்படங்களுடன்..!!

செய்தி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் பரவியுள்ள நிலையில் இதன் ஆபத்தை உணராத பலர் இன்றும் பல மோசமான செயற்பாடுகளை செய்து வருகின்றனர். ஊரடங்கு சட்டம் மற்றும் விடுமுறையை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி அதில் பார்ட்டிகள் விழாக்கள் ஏற்பாடு செய்கிறனர். சிலர் நண்பர்களுடன் வீட்டில் கூடி மது, புகைத்தல் என கொண்டாடுகின்றனர்.

ஆனால் உங்களுக்கு கொடுக்கப் பட்ட இந்த விடுமுறை மரணத்தில் இருந்து நீங்கள் தப்புவதற்கான சிறிய வழி. இந்த வழியில் நீங்கள் செல்வதற்கான முயற்சி என்ன என்பதை மறந்து விட்டு சில மணி நேர மகிழ்ச்சிக்காக குடி கும்மாளம் என்று கொண்டாடுகின்றீர்கள். ஒரு நிமிடம் இதில் இணைக்கப் பட்ட புகைப்படத்தை பாருங்கள்.

கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டால் நீங்கள் என்ன மதம் என்பதோ , சாதி என்பதோ, நீங்கள் எவ்ளோ பெரிய பிரபலம் என்பதோ செல்லுபடி அற்றதாகும். உங்களை பாலித்தீனால் மட்டுமே சுற்றி பெட்டியில் அடைத்து சீல் வைத்து விடுவார்கள். உங்கள் சடலத்தை நெருகிய ஒருவர் தவிர வேறு யாரும் பார்ப்பதற்கு அனுமதி இல்லை. இந்த அனுமதி கூட இறந்தது யார் என்பதை உறுதி படுத்த மட்டுமே.

அடுத்து உங்களுக்கு எந்த ஆத்மா சாந்தி பிரார்தனைகள், மதச் சடங்குகளும் இல்லை. உங்கள் உடலுக்கு உங்கள் பிள்ளைகள் கூட மண் தூவ மாட்டார்கள். யாரும் இல்லாத அநாதை போல் புதைக்கப் படுவீர்கள். இப்படியான கொடூர மரணம் உங்களுக்கு மட்டும் அல்ல எங்கள் எதிரிக்கு கூட வரக் கூடாது என்பதே என் பிரார்த்தனை. உங்கள் பிரார்த்தனை இது என்றால் வெளியே செல்லாதீர்கள், கொரோனாவை பரப்பாதீர்கள்…அப்பாவிகளை கொன்று புதைக்காதீர்கள்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *