கைபேசியால் வந்தது கைகலப்பு; கணவனின் விரல்களை வெட்டினார் மனைவி

சினிமா

அனுமதியின்றி தனது கைபேசியை எடுத்துச் சோதித்ததால் ஆத்திரம் அடைந்த ஒரு பெண் தன் கணவனின் விரல்களைக் கத்தியால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் இந்தி யாவின் பெங்களூரு மாநகரில் நிகழ்ந்திருக்கிறது. பீகாரைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் சிங்கிற்கும் சுனிதாவிற்கும் (படம்) கடந்த ஏழு ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. மூன்றாண்டு களுக்குமுன் பெங்களூருக்கு இடமாறிய அவ்விருவரும் வெவ் வேறு தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களில் பணியாற்றி வந்தனர். அண்மையில், ஓய்வு வேண்டி பணியில் இருந்து சிறிது காலம் விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்தார் சுனிதா.

அவர் எப்போதும் கைபேசியும் கையுமாக இருந்து வந்ததால் அவ ருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் எழுந்ததாகக் கூறப் பட்டது. இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி பணி முடிந்து இரவு 11 மணிக்கு வீடு திரும்பி னார் சந்திரபிரகாஷ். அப்போது வீட்டில் இரவு உணவு தயாராக இல்லை. ஏன் உணவு சமைக்கவில்லை என்று சுனிதாவிடம் அவர் கேட்க, “இணையம் வழியாக ‘ஆர்டர்’ செய்துள்ளேன். எந்த நேரத்திலும் வந்துவிடும்,” என்று சுனிதா கூறி உள்ளார்.

அப்போதும் அவர் கைபேசியை பார்த்தபடியே பதில் கூறியதால் அவரது கணவர் திட்டியுள்ளார். இதையடுத்து, அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் எழ, தம் மனைவியின் கையிலிருந்த கை பேசியைப் பிடுங்கி, அவருக்கு வந்த குறுஞ்செய்திகளைப் பார்த் துள்ளார் சந்திரபிரகாஷ். அவரிடம் இருந்து சுனிதா தன் கைபேசியைப் பறிக்க முயல, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கோபத்தில் சுனிதா சமையல் அறைக்குள் புக, சந்திரபிரகா‌ஷும் பின்தொடர்ந்தார். பிரச்சினை முற்ற, தம் மனைவியின் கன்னத்தில் சந்திரபிரகாஷ் அறைந் துள்ளார். உடனே சுனிதா அங்கிருந்த கத்தியை எடுத்தபடி தம் கணவரை நோக்கிப் பாய்ந்தார். அப்போது கத்தி சந்திரபிரகா‌ஷின் வலது கையைத் தாக்க, விரல்கள் வெட்டுப்பட்டன. இதைச் சற்றும் எதிர்பாராத அவர் கைபேசியைக் கீழே போட்டு விட்டு அலறியபடி வீட்டைவிட்டு ஓடி, அருகிலிருந்த மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *