கேரளாவில் கொடூரம் – பள்ளி சிறுவனை 2 ஆண்டுகளாக சீரழித்து வந்த 45 வயது பெண்..! – திடுக் தகவல்

சினிமா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பொழியூர் என்ற பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவனின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வீட்டில் தகராறு செய்வது. டிவியை உடைப்பது. பெற்றோரை தாக்க முயற்சிப்பது ஆகியவற்றால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பயந்து போன பெற்றோர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவனை குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்து சென்றனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மாணவனிடம் விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தவகல்கள் வெளியாயின.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோடை விடுமுறையை கொண்டாட மாணவன் அருகில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சித்தி வீட்டின் அருகே வசிக்கும் 45 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு அழைத்து மாணவனை தன்னுடைய காம வலையில் வீழ்த்தி ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். அதன்பிறகு, பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது தினமும் வீட்டுக்கு வரவழைத்து மாணவனை சீரழித்து வந்துள்ளார்.
பல நாட்கள் பள்ளிக்கே செல்லாமல் அந்த பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளான் அந்த மாணவன். ஒரு கட்டத்தில், சித்தி வீட்டிலேயே தங்கி படிப்பை தொடர்கிறேன் என்று கூறியுள்ளான்.  இதனால் தான் வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது. பல கட்ட விசாரணைக்கு பிறகு மைனரான அந்த மாணவனுக்கு காம ஆசையை உண்டு பண்ணி அவனை தன்னுடைய உடல் பசியை தீர்த்துக்கொண்டார் என்ற முடிவுக்கு வந்தனர். இதனை தொடர்ந்து, குழந்தைகள் நல அமைப்பினர் பொழியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல் உண்மை என் தெரியவந்தது. நேற்று மாணவனை திருவனந்தபுரம் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்று வாக்குமூலம் பெற்றனர். அதைத்தொடர்ந்து மாணவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக போலீசார் ேபாக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இன்று அல்லது நாளை அந்த பெண் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *