கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள், hair growth tips in tamil

அழகுக் குறிப்புகள்

கூந்தல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்க உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் சில மூலிகைகளை கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க உபயோகிக்கலாம்.

உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பேரிச்சை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம்.

கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள், எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன் படுத் துங்கள். டென்சனைக் குறையுங்கள். மகிழ்வோடு இருங்கள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் மட்டுமல்ல முடியிலும் தெரியும்.

வாசனை திரவியங்கள், பாடி ஸ்பிரே போன்றவைகளைத் தவிருங்கள். அடிக்கடி தலைவலியா? மருத்துவ ஆலோசனை பெறுங்கள். தலைவலியால் முடி உதிர்வது நிச்சயம்.

புரதமே ஆதாரம்:- முழு புரதத்தால்தான் உருவாகிறது. முடி வளர்வதற்கு அமினோ அமிலங்களும், புரதமும் அவசியம். 90 சதவீதம் முடிகள் வளரும் நிலையில் இருக்கும், 10 சதவீதம் முடிகள் உறங்கிக் கொண்டிருக்கும். ஒய்வு நிலையைக் கடந்த பிறகும், முடிகள் உதிரத் தொடங்கும். புதிதாக முடிகளும் வளரும். அதாவது 50- முதல் 100 முடிகள் வரை உதிர்ந்தால் அது இயல்பு.

வளர்ச்சியை தரும் வைட்டமின்கள்:- வைட்டமின் (அ) பயோடின் சத்து, செல்களை உற்பத்தி செய் யும் செல்களைப் புதுப்பிக்கும். இதனால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படுகிறது.

உணவுகள்:- வேக வைத்த முட்டை, சீஸ், பால், யோகர்ட்.

வைட்டமின் சி:- முடி வளர்ச்சிக்கு உதவும். இள நரையைப் போக்கும் வறட்சியை நீக்கும்.

கறிவேப்பிலை:- இதில் மயிர்க்கால்களை வலிமைபடுத்தும் ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இது மயிர்கால்கள் நன்கு சுவாசிக்க உதவும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ‘பி’ முடியின் நிறத்தைத் தக்க வைக்க உதவும்.

மிளகு:- மிளகில் கேப்சைசின் என்னும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சேர்மம் உள்ளது. முக்கிய மாக மிளகு தலைச்சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு தேவையான சத்துக்கள் பெற வழிவகுக்கும்.

கற்றாழை:- புரோடியோலிடிக் என்னும் நொதி உள்ளது. இது ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்கும். மேலும் இது சிறந்த கண்டிஷனர் போன்றும் செயல்படும். அது மட்டுமின்றி கற்றாழை முடியின் வளர்ச்சியை தூண்ட பொடுகைக் குறைக்க, உச்சந்தலை அரிப்பை தடுக்கவும் செய்யும்.

செம்பருத்தி:- இதில் முழுவதும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. மண்டை ஓடு மற்றும் மயிர்கால்களின் நலனை காக்கிறது. பொடுகு தொல்லைக்கும் நல்ல முடி வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக இருக்கிறது.

ரோஜா இதழ்கள்:- கொதிக்கும் நீரில் ரோஜா இதழ்களை இட்டு கொதிக்க வைத்து ஆர வைத்து அந்த தண்ணீரை தலை அலசுவதற்கு பயன்படுத்தலாம். இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது முடியை கண்டிஷன் செய்கிறது. முடிக்கு பளபளப்பை தருகிறது. தலையில் ஏதாவது தொற்று, அரிப்பு இருந்தாலும் அது குணமாகும்.

சூரிய ஜின்சென்ங் வேர்:- இது ஒரு சீன மூலிகையாகும். முக்கியமாக தலை வழுக்கைக்கு உதவுகிறது. முடி உதிர்வை தடுக்கிறது. முடி வளர்ச்சியை தூண்டுகிறது. முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை தருகிறது. முடிக்கு தயாரிக்கப்படும் டானிக்குகள், எண்ணைகளில் இது பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. ஷாம்பூக்களிலும் உண்டு.

பச்சை தேயிலை:- அதிக ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. முடி உதிர்வை தடுக்கிறது. இதில் பான்தனால் முடிக்கு வலுவூட்டுகிறது. தலை வழுக் கைக்கு, பலவீனமான கூந்தலுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.

குப்பைமேனி:- முடி உதிர்வுக்கும், மயிர்கால்களின் உறுதிக்கும், ரத்த ஓட்டத்திற்கும் முடி உடையாமல் பாதுகாப்பதற்கும் இது ஒரு நல்ல மூலிகையாகும். இதை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளலாம், அரைத்த பசையினை ஆலிவ் எண்ணையில் இட்டு தலைக்கு பயன்படுத்தலாம்.

ரோசுமேரி:- 100 வருடங்களுக்கு மேலாக இது முடி உதிர்வதை தடுக்க ஒரு மருந்தாக பயன் படுகிறது. முடி அடர்த்தி குறைதல், வழுக்கை போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு. ஆலிவ் எண்ணையில் கலந்து உபயோகித்தால் நல்ல தீர்வு கிடைக்கும். மயிற்கால்களில் படும்படியாக தேய்க்க வேண்டும். இளநரையை போக்கும் சக்தி உண்டு. மேலும் மயிற்கால்களுக்கு நல்ல ஊட்டத்தை தந்து முடி வளர உதவுகிறது.

புதினா:- இதன் எண்ணெய் பழங்காலத்தி லிருந்து முடி உதிரும் பிரச்சினைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது என்று சான்றுகள் உள்ளது. முடி வளர்ச்சியை சீர்படுத்துவதுடன் அதன் வளர்ச்சியை தடுக்கும் அத்துனை பிரச்சினைகளையும் தீர்க்கிறது. வேர்கால்களுக்கு அதிகமான ஊட்டத்தை தருகிறது.

முருங்கை:- முருங்கையில் தையோசயனேட் இருப்பதால் முடிக்கு நல்ல ஊட்டத்தை தருகிறது. முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதை எண்ணையாக மயிர்கால்களில் படும்படியாக தடவலாம். அல்லது, தேயிலையாக கொதிக்க வைத்து தலை அலசுவதற்கு பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய்:- நெல்லிக்காய் தலைமுடியை உதிராமல் வளரவும், நரை முடி தோன்றுவதை தடுக்கவும் செய்கிறது. இளநரை ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது. மேலும் முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இது ஒரு நல்ல கண்டிஷ்னராகவும் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காய் பசையை தலைக்கு ஒரு மாஸ்க் போலவும் பயன்படுத்தலாம்.

சீயக்காய்-மருதாணி:- இந்த மரத்தின் பட்டை, வேர், இலை கள் முடி வளர்ச்சிக்கானது, உதிர்வை தடுக்கவல்லது, முடிக்கு ஊட்டம் தருவது, பொடுகை தடுக்கவல்லது. உச்சந் தலையை சுத்தப்படுத்துகிறது. இதன் பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து உபயோகப்படுத்தலாம். தலைக்கு ஒரு கவசம் போல பயன்படுத்தலாம். முக்கிய மூலிகையாக முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.

மருதாணி முடிக்கு நல்ல நிறத்தை தருகிறது, முடியின் ஆரோக்கியத்தை காக்கிறது. கிருமி நாசினி, எதிர்பாக்டீரியாவாக செயல்படுகிறது. தலையில் உள்ள அதிக எண்ணையை நீக்குகிறது, இலைகளை பொடி செய்து, இதன் பொடியை தண்ணீரில் கலந்து பசை போன்று தலைமுடிக்கு தடவினால் அது நல்ல குளிர்ச்சியை தருகிறது, முடி வளர உதவுகிறது. முடியை நன்றாக கண்டிஷன் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *