குர்தா பாய் பரோட்டா சால்னா,tamil samayal tips

ஆரோக்கிய சமையல்

மசாலா அரைக்க:

மரசெக்கு கடலெண்ணய் 1 தேக்கரண்டி
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
அண்ணாச்சி மொக்கு 1
மராட்டிய மொக்கு 1
சோம்பு 2 தேக்கரண்டி
கசகசா 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
ககுருமிளகு 2 தேக்கரண்டி
முழு முந்திரி பருப்பு 12
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சை மிளகாய் 1

சிக்கன் சால்னாவிற்கு:

நாட்டுக்கோழி 1/2 கிலோ
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
பிரிஞ்சி இலை 2
பட்டை 2 இன்ச்
சோம்பு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 8 ( அம்மிகல்லில் மையாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 5 ( அம்மிகல்லில் மையாக நசுக்கியது)
தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
தண்ணீர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:

1. ஒரு வடசட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சில நொடிகள் வதக்கவும். பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

2. இந்த மசாலா கலவையை நன்றாக ஆற வைத்து பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ளவும்.

3. இப்பொழுது ஒரு வடச்சட்டியில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை மற்றும் சோம்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து அதில் குறிப்பாக சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

5. வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் , அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாய் விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்து நன்றாக கிளறி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6. இப்பொழுது அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும். இந்த கலவை நன்கு கூழ் போல் ஆகும் வரை வதக்கவும்.

7. இப்பொழுது இதில் நன்றாக சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுகோழி துண்டங்களை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். (குறிப்பு இந்த கடையில் சால்னா கொஞ்சம் தண்ணீர் போல் தான் இருக்கும் )

8. இந்த சமயத்துல வடசட்டியின் மூடியை மூடி குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இடை இடையே மூடியை திறந்து அடிபிடிக்காமல் ஒரு கிளறு கிளறி பிறகு மீண்டும் மூடியை மூடி கொதிக்க வைக்கவும். தண்ணீர் குறைந்தால் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

9. அதன் பிறகு நாட்டுக்கோழி வெந்துவிட்டதா என்று உறுதிபடுத்திய பின்னர் , காரம், உப்பு சரிபார்த்து கொள்ளவும். குறிப்பு சால்னா கொஞ்சம் தண்ணீர் போல் தான் இருக்க வேண்டும் ஆனால் காரம் கொஞ்சம் சுருக்கென்று இருக்க வேண்டும், தேவைபட்டால் பசு வெண்ணையை 1 தேக்கரண்டி சேர்த்துகோங்க அதன் மீது பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *