குரு பெயர்ச்சி இன்னைக்கு எந்த ராசிக்கு எப்படி வேலை செய்யும்? இதோ தெரிஞ்சிக்கங்க…

ஜோதிடம்

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று உங்களுடைய ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.

மேஷம் மனதுக்குள் நினைத்து வைத்திருந்த செயல்கள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய பணிகளில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய புதுிய முயற்சிகளுக்கு பெற்றோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். தண்ணீர் சம்பந்தப்பட்ட செயல்களைச் செய்பவர்களுக்கு தன லாபங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.

ரிஷபம் உங்களுடைய உடன் பிறப்புகளினால் உங்களுக்கு ஆதரவற்ற சூழல்களே உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்க கொஞ்சம் காலதாமதமாகும். புதிய ஆட்கள் யாரிடமும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும்போது சற்று கவனமாக இருங்கள். கால்நடைகளின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

 

மிதுனம் மனதுக்குள்ளே நினைத்து வைத்திருந்த காரியங்கள் அத்னையும் நிறைவேறும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்கும். கண் சம்பந்தப்ப்ட்ட சின்ன சின்ன பிரச்னைகள் வந்துபோகும். வீட்டினுடைய பொருளாதாரம் கிடுகிடுவென உயரும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

 

கடகம் தொழில் சம்பந்தப்பட்ட காரியங்களில் புதுப்புது சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலமாக மகிழ்ச்சி பெருகும். போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் உங்களுககு சாதகமாகவே அமையும். நண்பர்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிக்கான வாய்ப்புகள் வந்து போகும். அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது

சிம்மம் வழக்கத்தை விடவும் உங்களுடைய செயல்பாடுகிளல் வேகம் கொஞ்சம் அதிகாக இருப்பதை நீங்களே உணர்வீர்கள். புதிய பொருள்களை வீட்டுக்காக வாங்கிச் சேர்ப்பீர்கள். மாணர்களுக்கு கல்வியில் சிறிது கவனம் தேவை. எதையும் தைரியத்துடன் கையாண்டு புதிய முடிவுகளைச் சிறப்பாக எடுப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

கன்னி நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுடைய பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உறவினர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்கின்ற செயல்களில் கொஞ்சம் நிதானங்கள் தேவை. வழக்குகளில் உங்களுக்கு மந்தத்தன்மை உண்டாகும். கோவில் சம்பந்தப்பட்ட திருப்பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். .

துலாம் பணிபுரியும் இடங்களில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் உண்டாகும் பழுதுகளைச் சரிசெய்வீர்கள். உங்களுடைய நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கமும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும். நண்பர்களுடன் சேர்ந்து செய்கின்ற அறச்செயல்களினால் உங்களுக்குப் புகழ் உண்டாகும்.

விருச்சிகம் சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பலன்களும் லாபங்களும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். புதிய வேலைவாய்ப்புகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான முயுற்சிகள் கைகூடும். உங்களுடைய நிர்வாகத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு, அதை செயல்படுத்தி பாராட்டப்படுவீர்கள். .

தனுசு உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு சுப செலவுகள் உண்டாகும். ஆன்மீகப் பணிகளுக்கு உதவி செய்துமனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல்கள் உருவாகும். நண்பர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். சொத்து சேர்க்கைகள் உண்டாகும்.

மகரம் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி, கொடுத்து மகிழ்வீர்கள். உங்களுடைய தொழில் தொடர்பான முயற்சிகளில் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும். பெற்றோர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்தல் நல்லது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும்.

கும்பம் குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் கால தாமதங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்னைகள் தோன்றி மறையும். நீங்களே எதிர்பார்க்காத தன அதிர்ஷ்டத்தினால் தனவரவு உண்டாகும். புதிய நபர்களுடன் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் சுபச் செய்திகள் உண்டாகும்.

மீனம் குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவுகள் முழுமையாக உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஈடுபடும் வாக்குவாதங்களின் மூலமாகவும் லாபங்கள் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வர்த்தகம் சம்பந்தப்பட்ட முதலீட்டில், நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். வேளாண்மை தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். உங்கள் உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *