குதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

அழகுக் குறிப்புகள்

 

நாம் காலணிகள் தேர்வு செய்யும்போது அது நம் பாதத்தை காக்குமா, நம் பாதங்களுக்கு செட் ஆகுமா என்பதைப் பார்த்துத்தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, அது நம்மை உயரமாகக் காட்டுமா, அழகாகக் காட்டுமா என்பதைப் பார்த்து வாங்குவது நிச்சயம் விபரீதத்தில்தான் போய் முடியும்.

குதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு பிளான்டர் பேசிட்டீஸ் (plantar fascicts) எனப்படும் குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. குதிகால் செருப்பு அணியும்போது உடலின் முழு எடையையும் கணுக்கால் தாங்க வேண்டியிருக்கும். இதனால் கணுக்கால் அதிக அளவு அழுத்தத்துக்கு உண்டாகும். விளைவு, வலி ஏற்பட்டு, நரம்புகள் தன் சம நிலையை இழந்து சுளுக்கு ஏற்படும். கால் தடுமாறும் நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு பாதிப்பு, தசை முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

வெறுங்காலிலோ அல்லது தட்டையான செருப்புகள் அணியும்போதோ, நம் உடலின் மொத்த எடையும் முதுகெலும்பு மூலமாகச் சமன் செய்யப்படும். ஆனால், குதிகால் செருப்பு அணியும்போது குதிகால் சற்று உயரமாக இருக்கும். இதனால், நம் உடலானது சற்று முன்னோக்கி வளைந்து இருக்கும். உடலின் ஒட்டு மொத்த எடையை மூட்டு தாங்க வேண்டியிருப்பதால் மூட்டு வலி ஏற்படும். தொடர்ந்து குதிகால் செருப்பு அணியும்போது மூட்டு ஜவ்வில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கும்.

குதிகால் செருப்பு தொடர்ந்து அணிபவர்களுக்குச் சிலசமயம் குதிகால் சிவந்து, லேசான வலி இருக்கும். குதிகால் உள் எலும்புகள் சேதமடைந்ததின் அறிகுறி இது. இதை அறியாமல், ஆயில் மசாஜ், கால் நரம்புகளை உருவிவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்.

குதிகால் செருப்பு தொடர்ந்து அணியும்போது, கால் விரல்கள் பாதத்துடன் சேரும் பகுதி அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும்.

மேலும் குதிகால் செருப்பு அணியும்போது அதைப் பேலன்ஸ் செய்ய நம் உடல் நிலையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. தொடர்ந்து குதிகால் செருப்பு அணியும்போது உடல் அந்த மாற்றத்தை நிரந்தரமாக மாற்றமாக ஏற்றுக்கொள்ளும். இதனால், உடலின் கீழ் இடுப்புப் பகுதி பெரியதாகுதல், முதுகுப்பகுதி வளைதல் (கூன் விழுதல்) போன்றவை ஏற்படலாம். இது தவிர, சில பெண்களுக்கு கர்ப்பபை பாதிப்புகளும் ஏற்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *