காதல் தோல்விக்கு கலங்கக்கூடாது – காஜல் அகவர்வால்

சினிமா

காதலில் தோல்வி அடைந்தால் வருத்தப்படக்கூடாது என்று நடிகை காஜல் அகவர்வால் கூறியுள்ளார். எல்லா காதலும் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இன்று பெரும்பாலான இளையர்கள் காதல் வயப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை காதலோ டுதான் நகர்கிறது. ஆனால் காதலில் தோல்வி அடைந்தவர்கள் வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். அதில் இருந்து அவர்கள் மீண்டு புதிய வாழ்க் கையைத் தொடங்க வேண்டும்.

“காதல் உணர்வு என்பது இயற்கையானது. ஆனால் எல்லா காதலும் திருமணம் வரை செல்வது இல்லை. சமூகப் பிரச்சினைகள், பெற்றோர்களின் எதிர்ப்புகள் உள்பட பல்வேறு காரணங்கள் காதலுக்குத் தடையாக நிற்கின்றன. காதலிப்பதும் காதலில் தோல்வி அடைவதும் சகஜமானதுதான். காதலில் விழுந்தால்கூட நாம் யார் என்பதை மறக்கக் கூடாது, நமது தனித்தன்மையை இழக்கவும் கூடாது. “நமது முக்கியத்துவத்தை எந்த விதத் திலும் காதல் குறைத்துவிடக் கூடாது. காதலன், காதலி தான் உலகம் என்றும் வாழக்கூடாது. அப்படி இருந்தால்தான் காதலில் தோற்றால் கூட அதற்காக வருத்தப்பட மாட்டோம்,”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *