காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம்… கூடா நட்பால் இளைஞருக்கு நேர்ந்த விபரீத பின்னணி

சினிமா

தமிழகத்தில் காதலனை கொலை செய்து உடலை வாய்க்கால் புதரில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரைப் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் புவனகிரி காவல் நிலையத்தில் பொலிஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

இவரது நடவடிக்கை காலப்போக்கில் சரி இல்லாததால் பொலிஸ் நண்பர்கள் குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வி என்பவருக்கும், சீனிவாசனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும், மேலும் தாமரைச்செல்விக்கு வேறொரு இளைஞருடன் முறையற்ற உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடிக்கடி குடிபோதையில் தனது கள்ளக்காதலி வீட்டுக்கு செல்லும் சீனிவாசன், தாமரை செல்வியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சீனிவாசன் தாமரைச்செல்வியுடன் தான் நெருக்கமாக இருந்த போது செல்போனில் எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் தான் கடந்த 25-ஆம் திகதி கீரப்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்கால் புதரில் சீனிவாசன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில், சீனிவாசன் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது.

இதனால் பொலிசார் தாமரைச்செல்வி மற்றும் அவரது தாயாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த -ஆம் திகதி குடிபோதையில் தனது வீட்டுக்கு வந்த சீனிவாசனிடம் இருவரும் நெருக்கமாக இருந்த- செல்போனில் பதிவு செய்திருந்த போட்டோக்களை கொடுக்கும் படி தாமரைச்செல்வி கேட்டுள்ளார்.

ஆனால் அதனை தர மறுத்த தால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் சீனிவாசனை பிடித்து தாம் தள்ளியதாகவும், இதில் கீழே விழுந்த அவர் தலையில் பலத்த அடிபட்டு கீழே விழுந்தார்.

அவரை தட்டிய போது எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் இருந்ததால், அவர் இறந்துவிட்டார் என்பதை அதிர்ச்சியடைந்தேன். அதன் பின் பக்கத்து வீட்டில் இருந்த தாயார் லட்சுமியை அழைத்து வந்து கீழே விழுந்து கிடந்த சீனிவாசனின் கழுத்தில் கயிற்றை மாற்றி தரதரவென வீட்டின் பின்பக்கமாக இழுத்துச் சென்று பின்பக்க வாய்க்கால் புதரில் போட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சீனிவாசன் வைத்திருந்த செல்போனை எடுத்து அதனை கல்லால் சுக்குநூறாக உடைத்து அருகில் அருகில் மண்ணைத் தோண்டி புதைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து தாமரைச்செல்வி மற்றும் அவரது தாயாரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *