காதலியின் அப்பா சொன்ன வார்த்தையால் இளைஞன் செய்த மோசமான செயல்… விசாரணையில் தெரிந்த உண்மை

ஜோதிடம்

தமிழகத்தில் காதலித்த பெண்ணை மணப்பதற்காக மாமனன் விதித்த நிபந்தனையால், இளைஞர் ஒருவர் திருடனாக மாறியதால் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் செளந்திரபாண்டியன். இவர் தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் பூட்டை நீண்ட நேரம் போராடி உடைத்து, செல்லதுரையும், அவரது இரு கூட்டாளிகளும் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

அங்கிருந்த பீரோவை திறக்க முயன்று . பல மணி நேரமாக முயற்சித்தும் பீரோவை திறக்க இயலாததால் வீட்டில் இருந்த சுவர் கடிகாரம் ஒன்றையும், சிறிய எல்.ஈ.டி. டிவியையும் திருடிக் கொண்டு தப்பி உள்ளனர்.

அதன் பின் வீட்டின் உரிமையாளர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் மேற்கொண்டு விசாரணையில், அங்கிருந்த சிசிடிவி கமெராவை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது காரில் வந்த 3 பேர் கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதில் உள்ள காரின் பதிவு எண்ணை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செல்லதுரை, மைக்கேல் அந்தோணி, விக்னேஷ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்ம், கொள்ளையர்களில் ஒருவனான செல்லதுரை ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவன் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்ததால் தனது பெண்ணை திருமணம் செய்து தர 10 லட்சம் ரூபாய் பணத்துடன் வரவேண்டும் என்று பெண்ணின் தந்தை நிபந்தனை விதித்ததால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துள்ளனர்.

அதன் பின் பெரிய பங்களா வீட்டில் திருடினால் உடனடியாக பணம் சம்பதிக்கலாம் என்று திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் இறங்கியுள்ளனர். அதன்படி சவுந்திர பாண்டியன் வீட்டின் பூடை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும். போதிய முன் அனுபவம் இல்லாததால் பீரோவை திறக்க இயலாமல் ஏமாற்றத்துடன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த 80 ரூபாய் கடிகாரத்தையும், சிறிய டிவியையும் தூக்கிச்சென்று 1000 ரூபாய்க்கு விற்று பொலிசில் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *