காதலியிடம் ஆண்கள் சொல்லாமல் மறைக்கும் 15 விடயங்கள்!!

ஜோதிடம்

எல்லா நேரங்களிலும், நேர்மை சிறந்த கொள்கையாக இருக்க முடியாது. இதைப் பொறுத்தே ஆண்கள் காதலியிடம் எதை கூற வேண்டும், எதை கூறக்கூடாது என்பது உள்ளது.

அதுவும் காதலியுடன் கருத்து வேறுபாடு கொண்டும், அவ் விடயத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மையை கொண்டும் ஆண்கள் சொல்லாமா, வேண்டாமா என்பதை தீர்மானிப்பார்கள்.

ஆம், ஆண்கள் உறுதியாக சில விடயங்களை காதலியிடம் சொல்லமாட்டார்கள். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக பெண்கள் அவர்களுக்கு பிடித்தமான உடையை அணியும் போது, அது அவர்களுக்கு நன்றாக இல்லாவிட்டாலும், அது நன்றாக இல்லை என்று கூறி துணைவர்கள் காயப்படுத்தமாட்டார்.

ஆண்கள் தங்கள் காதலை காதலியின் பெற்றோர்களுக்காக அதிகம் பகிர்ந்து கொள்ளமாட்டார், அதனை நீங்கள் அறிந்து கொள்ளவும் அனுமதிக்கமாட்டார்கள்.

பெண்கள் துணைவருக்கு பிடித்தமான உணவை முயற்சி செய்து தோல்வி அடையும் பொழுது, காதலியின் உற்சாகத்தை குறைக்கும் விதமாக ஆண்கள் நடந்து கொள்ளமாட்டார்கள்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆண்கள் காதலியை விட மற்ற ஆண் நண்பர்களுடனே நேரம் செலவிட விரும்புவார்கள். இதைப் பற்றி ஆண்கள் தெளிவாக விவரிக்காமல் இருக்கலாம் ஆனால் அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள்.

ஆண்கள் மற்ற பெண்களை பார்க்கமாட்டார் என்று எண்ணினால் அது பெண்களிடம் இருக்கும் ஒரு தவறான கருத்து என்று சொல்லாம். ஏனெனில் ஆண்கள் பெரும்பாலும் மற்ற பெண்களைப் பார்ப்பார்கள். ஆனால், அதை காதலியிடம் கூற மாட்டார்கள்.

ஆண்கள் காதலிக்காக எதையும் செய்வார்கள். ஆனால் வெகு நேரம் காதலிக்காக காத்திருப்பதை வெறுப்பார்கள். இருப்பினும் அதை ஒரு போதும் காதலியிடம் கூறமாட்டார்கள். ஆனால இதைப் பற்றி கூறாமலே பெண்கள் அறிந்து கொள்ள விரும்புவார்கள்.

ஆண்கள் தங்களை வேறு யாருடனும் ஒப்பிடுவதை வெறுப்பார்கள். ஆனால் அப்படி செய்ய பெண்கள் முயற்சிக்கும் போது வாதாடமாட்டார்கள் மற்றும் சொல்லவும் மாட்டார்கள்.

பெரும்பாலான ஆண்கள் உணர்ச்சிகரமாக இருந்தாலும், காதலியிடம் அன்பையும் காதலையும் வெளிக்காட்டும் திறன் அவர்களுக்கு இல்லை.

சில விடயங்களில் பெண்கள் கை ஓங்கி இருக்க எண்ணலாம், அதை ஆண்களும் அனுமதிக்கலாம். ஆனால் விரும்பமாட்டார்கள். ஏனெனில் பெரும்பாலான ஆண்கள் தாங்களே முடிவு எடுக்க எண்ணுவர்.

ஆண்கள் இரவு நேரக் கொண்டாட்டத்தில் நடப்பவைகளை ஒரு போதும் காதலியிடம் கூறமாட்டார்கள்.

முக்கியமாக ஆண்களுக்கு முந்தைய உறவுகள் ஏதேனும் இருந்தால், அந்த விவரங்களை பற்றி பெண்கள் அறிய அனுமதிக்கமாட்டார்கள்.

ஆண்களுக்கு ஒரு நல்ல ஆண் நண்பர் இருந்தால், அவர்களைப் பற்றி காதலியிடம் புகழ்பாட மாட்டார்கள். எனினும் அவர்கள் சிறந்த நண்பர்களே.

ஆண்கள் ஒரு காலமும் போலியான அணுகுமுறையை விரும்பமாட்டார்கள். அதை பற்றி காதலியிடம் பேசாமல் இருக்கலாம். ஆனால் அதை விட்டு நகரும் அறிகுறிகளை காண்பிப்பார்கள்.

காதலி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எந்த வார்த்தையும் சொல்லாமல் விலகிவிடுவார்கள்.

ஆண்கள் எந்தச் சூழ்நிலையிலும் அழகான பெண்ணைப் பார்த்தாலும், காதலியை விட அழகாக இருப்பதாகச் சொல்லமாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *