காதலன் வீட்டில் கை ப்பற்றப்பட்ட மாணவியின் எலு ம்பு மற்றும் தலைமுடி: அதிர்ச்சி சம்பவம்

சினிமா

திருப்பூர் மாவட்டத்தில் மாயமான மாணவியின் எலும்பு மற்றும் தலைமுடி, அவருடைய காதலன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழரசி என்பவர் கடந்த ஜூன் 5ம் திகதி, தன்னுடைய 19 வயதான தங்கை முத்தரசியை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சரக்கு வாகன ஓட்டுநராக வேலை செய்துவரும் பரத் என்பவரை முத்தரசி பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்ததும், அதனை தமிழரசி கடுமையாக எதிர்த்திருந்ததும் தெரியவந்தது.

 

சந்தேகத்தின் பேரில் பரத்தை காவல் நிலையத்தில் வைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மே மாதம் 15ம் திகதியன்று பரத்திற்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த முத்தரசி, பரத்தை நேரில் சந்தித்து கதறி அழுதுள்ளார். பின்னர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதாக மிரட்டியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத பரத், முத்தரசியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார்.

அங்கு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பரத், முத்தரசியை அடித்துக்கொலை செய்துள்ளார்.

பின்னர் அவருடைய உடலை தன்னுடைய காரில் வைத்து வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். பகல் முழுவதும் உடலை வீட்டில் வைத்திருந்த பரத் குடும்பத்தினர், இரவில் யார்க்கும் தெரியாமல் வீட்டின் பின் பகுதியில் புதைத்துள்ளனர்.

அன்றைய தினம் வீட்டில் தனியாக இருந்த பரத்தின் தாய் வட்சுமிக்கு அடிக்கடி முத்தரசியின் நியாபகம் வந்துகொண்டே இருந்ததால், தூங்க முடியாமல் அவஸ்தையடைந்துள்ளார்.

உடனே அவர்களுடைய உறவினரும் ஜோதிடருமான குமாரசாமியின் அறிவுரையை கேட்டு, புதைக்கப்பட்டிருந்த முத்தரசியின் உடலை தோண்டி எடுத்து எரித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பரத்தின் தாயார் லட்சுமி, பரத்தின் குடும்ப நண்பர் குமார், தந்தை கனகராஜ் மற்றும் மாமன் சுப்பிரமணி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் பரத்தின் வீட்டிற்கு பின்புறம் குளியல் அறையின் அருகே மறைவாக இருந்த இடத்திலிருந்து கொலை செய்யப்பட்ட முத்தரசியின் எலும்பு, தலை முடி மற்றும் சாம்பல் ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *